நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

2024 தேர்தலில் மோடி வெற்றி பெற்றால் இந்தியாவில் இனி தேர்தல் நடத்தப்படாது: மல்லிகார்ஜுன கார்கே

2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தெரிவித்தார்.

News image

மல்லிகார்ஜுன கார்கே (கோப்புப்படம்)

Updated On :29 ஜனவரி 2024, 12:09 pm

DIN

புவனேஸ்வர்: 2024 மக்களவைத் தேர்தல் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு கடைசி வாய்ப்பாக இருக்கும் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது:

வரவிருக்கும் தேர்தலில் பாஜக கட்சி வெற்றி பெற்றால், பிரதமர் நரேந்திர மோடி சர்வாதிகாரத்தை விரும்பக்கூடும். பாஜக மற்றும் அதன் சித்தாந்தவாதியான ஆர்.எஸ்.எஸ்ஸிடமிருந்து மக்கள் விலகி இருக்க வேண்டும். அதே வேளையில் இந்தியாவில் ஜனநாயகத்தை காப்பாற்ற மக்களுக்கு இது கடைசி வாய்ப்பாக இருக்கும். நரேந்திர மோடி தேர்தலில் வெற்றி பெற்றால், நாட்டில் சர்வாதிகார ஆட்சி நடக்கும் என்றார். பிகார் முதல்வர் நிதிஷ் குமார் காங்கிரஸை விட்டு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு திரும்புவது தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.