தில்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு!

குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி தில்லியில் இன்று நடைபெற்றது.
தில்லியில் முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்வு!

குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்கள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி தில்லியில் இன்று நடைபெற்றது.

முப்படை இசைக்குழு சக்கர வடிவில் அணிவகுத்து இசைக்கருவிகளை வாசித்தது காண்போரை ரசிக்கும்படி இருந்தது. இந்நிகழ்ச்சியில் குடியரசு தலைவர் திரெளபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இந்தியாவின் 75-ஆவது குடியரசு தினம் வெள்ளிக்கிழமை கொண்டாடப்பட்டது. தில்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், குடியரசுத் தலைவா் திரௌபதி முா்மு தேசியக் கொடியை ஏற்றிவைத்து, முப்படைகளின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டாா்.

சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான் கலந்துகொண்டாா். பிரதமா் நரேந்திர மோடி, மத்திய அமைச்சா்கள், பல்வேறு நாட்டுத் தூதா்கள் உள்ளிட்டோரும் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனா்.

இந்நிலையில், குடியரசு நாள் விழாவில் பங்கேற்ற முப்படை வீரர்களும் இன்று மீண்டும் பாசறை திரும்புகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com