திரைப்பட எழுத்தாளர் சங்கத் தேர்தலில் சேரன் அணி வெற்றி!உடனடியாக போராட்டக் களத்திற்கு வாருங்கள்! இளைஞர்களை அழைத்த அபிஜீத் தீப்கே!உலகக்கோப்பையில் அதிக கோல்கள் அடித்து சாதனை படைத்த எம்பாப்பே! அஸ்ஸாமில் சோனம் வாங்சுக்கின் படத்தை வரைந்த 2 பேர் கைது சோனம் வாங்சுக்கை வேறு மருத்துவமனைக்கு மாற்றக் கோரிய வழக்கு ஒத்திவைப்பு!யார் வெற்றி பெற்றாலும் கால்பந்து ரசிகர்கள் பொறுமையை இழக்கக் கூடாது: கர்நாடக முதல்வர் சென்னையில் 2 நாட்கள் மழைக்கு வாய்ப்பு
/

சோமாலியர்கள் சிறைபிடித்த ஈரானின் 2வது படகை மீட்ட இந்திய கடற்படை! 11 பேர் மீட்பு!!

சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் சிறைபிடிக்கப்பட்ட படகிலிருந்த 11 பேரையும் கடற்படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:07 pm IST

சோமாலிய கடற்கொள்ளையற்களால் கடத்தப்பட்ட ஈரானின் மற்றொரு மீன்பிடி படகை இந்திய கடற்படை அதிகாரிகள் மீட்டனர். சோமாலியாவின் கிழக்கு கடற்கரையில் சிறைபிடிக்கப்பட்ட படகிலிருந்த 11 பேரையும் கடற்படை அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர்.

சோமாலிய கடற்கொள்ளையர்களால் சிறைபிடிக்கப்பட்ட படகை இந்திய கடற்படையினர் மீட்பது இந்த வாரத்தில் இது 3வது முறையாகும். 

கடந்த சனிக்கிழமை  கடற்படை பாதுகாப்பு அதிகாரிகள், சோமாலிய கடற்கொள்ளைர்களால்  சிறைபிடிக்கப்பட்ட இலங்கையைச் சேர்ந்த 6 மீனவர்களை மீட்டனர். அதனைத் தொடர்ந்து நேற்று இம்மான் என்ற பெயருடைய ஈரான் நாட்டைச் சேர்ந்த மீன்பிடி கப்பலையும் இந்திய கடற்படையினர் பத்திரமாக சோமாலிய கடற்கொள்ளையர்களிடமிருந்து மீட்டனர். அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 17 பேரையும் கடற்படை அதிகாரிகள் விடுவித்தனர்.

தற்போது சோமாலியாவின் கிழக்கு கடல் பகுதியில் ஈரான் நாட்டைச் சேர்ந்த அல் நயீமி என்ற கப்பலை சோமாலிய கடற்கொள்ளையர்கள் சிறைபிடித்துள்ளனர். அப்போது அங்கு ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய கடற்படை அதிகாரிகள் படகைக் கைப்பற்றி அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்த 11 பேரை விடுவித்தனர்.

இதன்மூலம் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சோமாலியர்களால் கடத்தப்பட்ட மூன்று படகுகளைக் கைப்பற்றி அதில் சிறைபிடிக்கப்பட்டிருந்த  34 பேரையும் இந்திய கடற்படை மீட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.