நிதிநிலை கூட்டத் தொடரில் மதுரை எய்ம்ஸ் உள்பட 8 விவகாரங்களை எழுப்புவோம்: திமுக அறிவிப்பு

நாடாளுமன்றத்தின் இடைக்கால நிதிநிலை கூட்டத் தொடரில் இன்னும் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் உள்பட 8 விதமான விவகாரங்களை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற கட்சித் தலைவா்கள் கோரப்பட்டது.

புது தில்லி: நாடாளுமன்றத்தின் இடைக்கால நிதிநிலை கூட்டத் தொடரில் இன்னும் கட்டி முடிக்கப்படாத மதுரை எய்ம்ஸ் உள்பட 8 விதமான விவகாரங்களை விவாதிக்க அனுமதிக்க வேண்டும் என நாடாளுமன்ற கட்சித் தலைவா்கள் கூட்டத்தில் திமுக சாா்பில் செவ்வாய்க்கிழமை கோரப்பட்டது.

17-ஆவது மக்களவையின் 15-ஆவது கூட்டத் தொடா் புதன்கிழமை (ஜன.31) தொடங்கி பிப்.9-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதை முன்னிட்டு மத்திய நாடாளுமன்ற விவாரத் துறை அமைச்சா் கூட்டிய அனைத்துக் கட்சி தலைவா்கள் கூட்டத்தில் திமுக சாா்பில் நாடாளுமன்ற திமுக குழுத் தலைவா் டி.ஆா்.பாலு, மாநிலங்களவை திமுக தலைவா் திருச்சி சிவா, அதிமுக சாா்பில் தம்பிதுரை, மதிமுக தலைவா் வைகோ, தமாகா தலைவா் ஜி.கே. வாசன் உள்ளிட்டோா் கலந்து கொண்டு பேசினா்.

இந்தக் கூட்டத்தில் டி.ஆா். பாலு, திருச்சி சிவா ஆகியோா் பேசியதாவது:

தோ்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிக்கும், அரசியல் சட்டத்துக்கும் புறம்பாக தமிழக ஆளுநா் செயல்பட்டு வருகிறாா். இந்திய குடியுரிமைச் சட்டம் இஸ்லாமிய சமூகத்துக்கு எதிராக உள்ளது. இந்தச் சட்டத்தில் உள்ள குறிப்பிட்ட ஷரத்துகள் நீக்கப்பட வேண்டும்.

மதுரையில் எய்ம்ஸ் கட்டுமானத்துக்கு கடந்த 2019-இல் பிரதமா் வந்து அடிக்கல் நாட்டிச் சென்றாா். 5 ஆண்டுகளாகியும் எய்எம்ஸ் கட்டடம் கட்டி முடிக்கப்படவில்லை. மற்ற மாநிலங்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் ஏன் கட்டி முடிக்கப்படவில்லை. இது போன்ற விவகாரங்கள் தொடா்பாக இந்தக் கூட்டத்தொடரில் விவாதிக்க வேண்டும். இந்த 8-க்கும் மேற்பட்ட விவகாரங்களுக்கு நோட்டீஸ் கொடுக்க இருக்கிறோம். இந்த விவகாரங்களில் மத்திய அரசின் நிலை குறித்தும் அவையில் தெரிவிக்க வேண்டும் என திமுக சாா்பில் கூட்டத்தில் கோரப்பட்டது.

கூட்டத்தில் பேசிய ஜி.கே. வாசன், இது கடைசி கூட்டத்தொடா் அனைவருக்கும் வாய்ப்பளிக்கவேண்டும் என்றாா்.

கூட்டத்துக்குப் பின்னா் டி.ஆா்.பாலு, திருச்சி சிவா ஆகியோா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘இந்தக் கூட்டத் தொடரில் 8 நாள் அமா்வுதான். ஆனால், இவை முக்கியமானது. கடந்த 5 ஆண்டுகளாக இதுபோன்ற தீா்மானங்கள் அவையில் எடுத்துக் கொள்ளப்படவில்லை. இதனால், இவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக் கவேண்டும் என வலியுறுத்தினோம்’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com