கோப்புப்படம்
கோப்புப்படம்

லஞ்சம் அளிக்க முயன்ற ஆசிரியர் கைது!

மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அலுவலருக்கு ரூ. 50,000 லஞ்சமளிக்க முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Published on

மத்தியப் பிரதேசத்தில் மாவட்ட பஞ்சாயத்து முதன்மை செயல் அலுவலருக்கு ரூ. 50,000 லஞ்சம் அளிக்க முயன்ற ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். தனக்கு வழங்கப்பட்ட இடைநீக்கத்தை திரும்பப் பெறக் கூறி லஞ்சம் அளித்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

அரசால் நடத்தப்படும் குப்பி ஆரம்பநிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் விஷால், தேர்தல் பயிற்சி நிகழ்வுகளுக்கு வராததால் அவர் மீது இடைநீக்க நடவடிக்கை எடுத்ததாக தபஸ்யா பரிஹார் ஐஏஎஸ் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து தனது இடைநீக்கத்தைத் திரும்பப்பெறக் கூறு ஐஏஎஸ் அலுவலகத்தில் லஞ்சம் கொடுக்க முயன்றதாக தபஸ்யா அளித்த புகாரின் அடிப்படையில் ஆசிரியர் விஷால் கைது செய்யப்பட்டார். 

ஊழல் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். வரும் புதன் கிழமை ஆசிரியரிடம் விசாரணை நடத்தவிருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

X
Dinamani
www.dinamani.com