எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

நீட் முறைகேடு: தோண்டத் தோண்ட வெளியாகும் பூதங்கள்!

நீட் முறைகேடு தொடர்பான விசாரணையில், பிகாரில் மாணவருக்கு பதில் எம்பிபிஎஸ் மாணவர் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிப்பு.

News image
நீட் தேர்வர்கள்
Updated On :1 ஜூலை 2024, 6:12 am

DIN

நீட் வினாத்தாள் கசிவு, தேர்வு மையங்களில் நடந்த முறைகேடு தொடர்பான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த மருத்துவர், தனது மகனுக்கு பதில் எம்பிபிஎஸ் மாணவரை நீட் தேர்வு எழுத வைத்த சம்பவம் வெளி உலகுக்குத் தெரிய வந்துள்ளது.

பிரயாக்ராஜ் பகுதியைச் சேர்ந்த டாக்டர் ஆர்.பி. பாண்டே, நைனி பகுதியில் தனியார் மருத்துவமனையை நடத்தி வருகிறார். இவர் தனது மகன் ராஜ் பாண்டேவுக்கு பதிலாக எம்பிபிஎஸ் மாணவரை நீட் தேர்வெழுத வைத்திருக்கும் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

பிகார் மாநிலம் முஸாபர் நகர் பகுதியில் இயங்கி வரும் டிஏவி பப்ளிக் பள்ளியில் நடந்த ட் தேர்வின்போது, ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த ஹக்மா ராம் என்பவர் தேர்வெழுதியிருக்கிறார். இவர் ஜோத்பூர்-எய்ம்ஸ் மருத்துவமனையில் எம்பிபிஎஸ் மூன்றாம் ஆண்டு படித்து வரும் மாணவர்.

இப்படி ஆள்மாறாட்டம் செய்தது கண்டுபிடிக்கப்பட்டதையடுத்து, தேர்வு மையத்தில் பயோ மெட்ரிக் பதிவை மேற்கொள்ளாமல், ஹக்மா ராமை தேர்வெழுத அனுமதித்தது எப்படி என்று தேர்வி மைய மேலாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

வழக்கை விசாரித்து வரும் பிகார் காவல்துறை, மாணவர் ராஜ் பாண்டே மற்றும் அவரது தந்தையை தேடி வருகிறார்கள். விசாரணையில், ராஜ் பாண்டே, கோட்டாவில் தங்கி நீட் தேர்வுக்கு பயிற்சி எடுத்து வந்ததாகவும், அங்குதான் ஹக்மா ராமை சந்தித்ததாகவும் ரூ.4 லட்சம் பேரம் பேரப்பட்டு, அவர் தேர்வெழுதியிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.