உத்தரப்பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் மாவட்டத்தில் நடந்த ஆன்மிக சொற்பொழிவு கூட்ட நெரிசலில் சிக்கி 120 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹாத்ரஸ் மாவட்டம், முகல்கர்ஹி கிராமத்தில் நடந்த வழிபாட்டுக் கூட்டத்தின் போது இந்த சம்பவம் நேரிட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் பலியானவர்களின் குடும்பத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி ரூ. 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். மேலும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “ உத்தரப் பிரதேசத்தின் ஹாத்ரஸில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ. 50,000 வழங்கப்படும்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
The Prime Minister Shri @narendramodi Ji has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the mishap in Hathras. The injured would be given Rs. 50,000.
— PMO India (@PMOIndia) July 2, 2024
மேலும், ராகுல் காந்தி தன்னுடைய எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “உத்தரப் பிரதேச மாநிலம் ஹத்ராஸில் ஆன்மிக சொற்பொழிவின் போது கூட்ட நெரிசலில் சிக்கி ஏராளமான பக்தர்கள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்வதுடன், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்.
அரசு காயமடைந்தவர்களுக்கு சாத்தியமான அனைத்து சிகிச்சைகளையும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கவும் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.
இந்திய கூட்டணியைச் சேர்ந்த தொண்டர்கள் மீட்புப்பணிக்கு தேவையான தங்கள் ஒத்துழைப்பை வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளார்.
à¤à¤¤à¥à¤¤à¤° पà¥à¤°à¤¦à¥à¤¶ à¤à¥ हाथरस मà¥à¤ सतà¥à¤¸à¤à¤ à¤à¥ दà¥à¤°à¤¾à¤¨ मà¤à¥ à¤à¤à¤¦à¤¡à¤¼ सॠà¤à¤ शà¥à¤°à¤¦à¥à¤§à¤¾à¤²à¥à¤à¤ à¤à¥ मà¥à¤¤à¥à¤¯à¥ à¤à¤¾ समाà¤à¤¾à¤° à¤à¤¤à¥à¤¯à¤à¤¤ पà¥à¤¡à¤¼à¤¾à¤¦à¤¾à¤¯à¤ हà¥à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) July 2, 2024
सà¤à¥ शà¥à¤à¤¾à¤à¥à¤² परिà¤à¤¨à¥à¤ à¤à¥ à¤à¤ªà¤¨à¥ à¤à¤¹à¤°à¥ सà¤à¤µà¥à¤¦à¤¨à¤¾à¤à¤ वà¥à¤¯à¤à¥à¤¤ à¤à¤°à¤¤à¥ हà¥à¤ à¤à¤¾à¤¯à¤²à¥à¤ à¤à¥ शà¥à¤à¥à¤° सà¥à¤µà¤¸à¥à¤¥ हà¥à¤¨à¥ à¤à¥ à¤à¤¶à¤¾ à¤à¤°à¤¤à¤¾ हà¥à¤à¥¤
सरà¤à¤¾à¤° à¤à¤° पà¥à¤°à¤¶à¤¾à¤¸à¤¨ सॠà¤à¤¨à¥à¤°à¥à¤§ हॠà¤à¤¿ à¤à¤¾à¤¯à¤²à¥à¤ à¤à¥ हर सà¤à¤à¤µ à¤à¤ªà¤à¤¾à¤° à¤à¤µà¤â¦
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

மாணவர்களை நீங்கள் மன்னிக்கத் தேவையில்லை; நீங்கள்தான் மன்னிப்பு கேட்க வேண்டும்: ராகுல்

மாணவர்களிடம் பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும்! - ராகுல் காந்தி வலியுறுத்தல்!

சிஜேபிக்கு ஆதரவு! பிரதமர் மோடி வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!
மோடி பதவி விலக வேண்டும்! பிரதமர் வீட்டின் முன்பாக ராகுல் காந்தி தர்னா!
விடியோக்கள்

திமுகவிற்கு உள்ளுக்குள் சந்தோசம்! அமைச்சர் அருண்ராஜ்! | TVK | DMK





