பிகாரின் சிவான் மாவட்டத்தில் கண்டகி ஆற்றின் மீதுள்ள பாலத்தின் ஒரு பகுதி இன்று காலை இடிந்து விழுந்துள்ளது.
சிவான் மாவட்டத்தின், தியோரியா தொகுதியில் பாலம் ஒன்று அமைந்துள்ளது. இந்த பாலமானது பல கிராமங்களை இணைத்து வருகின்றது. இந்த நிலையில் இன்று காலையில் பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது.
இந்த சம்பவம் இன்று காலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. பாலம் இடிந்ததில் இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. பிகாரில் இதுபோன்ற நிகழ்வு தொடர்ந்துள்ள நிலையில் கடந்த 15 நாள்களில் இது ஏழாவது சம்பவமாகும்.
பாலம் இடிந்ததற்கான சரியான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக துணை வளர்ச்சி ஆணையர் முகேஷ் குமார் தெரிவித்தார். தொகுதியைச் சேர்ந்த மூத்த அதிகாரிகள் ஏற்கனவே சம்பவ இடத்தை அடைந்து ஆய்வு செய்தனர்.
பிகாரில் பெய்த கனமழையின் காரணமாக அடுத்தடுத்து பாலங்கள் இடிந்து விழும் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.
கடந்த ஞாயிறன்று பதாரியா பஞ்சாயத்தின் கோஷி டாங்கி கிராமத்தில் தாக்கூர்கஞ்ச் பிளாக்கில் பாலம் திடீரென இடிந்து விழுந்தது. தொடர்ந்து இடிந்துவிழும் பாலங்களில் இது ஆறாவதாகும்.
இதற்கு முன்னதாக பிகாரின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் பான்ஸ்பரி ஷ்ரவன் சௌக் அருகே மரியா ஆற்றின் கிளை நதியில் பழமையான ஒரு பாலம் இடிந்து விழுந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

ரோஹிணியில் கட்டுமானத்தில் இருந்த வீடு இடிந்து விபத்து: ஒருவா் உயிரிழப்பு; 2 போ் மீட்பு

பழங்கால வீட்டின் சுவா் இடிந்து விழுந்தது: வட்டாட்சியரிடம் பொதுமக்கள் புகாா்

பாகிஸ்தானில் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் 6 குழந்தைகள் பலி!

சாகேத் கட்டட விபத்தில் 6 போ் உயிரிழப்பு; 8 போ் காயம்
விடியோக்கள்

காவல் மரணம்; யாரையும் காப்பாற்றும் நோக்கமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK

இறுதிச் சுற்றில் மீண்டும் ஆர்ஜென்டினா: சண்டைக்களமாக மாறிய ஆடுகளம்! | FIFA | FIFA World Cup 2026 |

Ravindran Duraisamy interview | விஜய் அரசை அண்ணாமலை விமர்சிக்காதது ஏன்? | TVK | CM Vijay | Annamalai




