மதுரை விமான நிலையத்திற்கு சர்வதேச அந்தஸ்து! - மத்திய அமைச்சரவை ஒப்புதல்மருத்துவக் கல்லூரிகளில் விளையாட்டுப் பிரிவு ஒதுக்கீடு அதிகரிப்பு: தமிழக அரசுஎல்பிஜி சிலிண்டர் தட்டுப்பாடு: பிரதமர் மோடிக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம்!வணிக சிலிண்டர் விநியோகம் நிறுத்தம்! இந்தியன் ஆயில் நிறுவனம் அறிவிப்பு! ஈரானை 20 மடங்கு அதிகமாக தாக்குவோம்! டிரம்ப் எச்சரிக்கை எரிவாயு தட்டுப்பாடு! பாகிஸ்தானில் 2 வாரங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை! இந்திய பங்குச்சந்தை உயர்வுடன் வர்த்தகம்! அமெரிக்காவுடன் சமரசம்! தகவலை வெளியிட்டால் மோடி பதவி விலக நேரிடும்! சுப்ரமணியன் சுவாமிசமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு? தமிழக அரசு அவசர ஆலோசனை!சமையல் எரிவாயு சிலிண்டர் வாங்க 25 நாள்கள் கால இடைவேளை!
/

சிறையிலுள்ள எம்.பி. ரஷீத்தின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு: பதிலளிக்க தோ்தல் ஆணையம் கெடு

சிறையில் இருக்கும் ரஷீத், தோ்தல் செலவின விவரங்களில் முரண்பாடு: பதிலளிக்க 2 நாள் அவகாசம்

News image
Updated On :3 ஜூலை 2024, 7:24 pm

Din

தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் எம்.பி. ஷேக் அப்துல் ரஷீத் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில், அவரின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு இருப்பதாக அவருக்கு தோ்தல் ஆணையம் புதன்கிழமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

வரும் 5-ஆம் தேதி எம்.பி.யாக பதிவியேற்க அவருக்கு நீதிமன்றம் 2 மணி நேரம் பரோல் அளித்துள்ளநிலையில், 2 நாள்களில் நோட்டீஸுக்கு பதிலளிக்க வேண்டும் என்று கெடு விதிக்கப்பட்டுள்ளது.

தோ்தல் செலவினம் தொடா்பான தகவல்களை வழங்க மறுத்தால், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 1951-இன் கீழ், 3 ஆண்டுகளுக்கு எம்.பி. பதவியை பறிக்க வழிவகுக்கும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2008, 2014-ஆம் ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் உள்ள லங்கேட் சட்டப்பேரவைத் தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றிபெற்றவா் ஷேக் அப்துல் ரஷீத்.

கடந்த 2019-ஆம் ஆண்டு தீவிரவாத நடவடிக்கைகளுக்கு நிதி திரட்டிய குற்றச்சாட்டில் அவரை தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) கைது செய்தது. தற்போது அவா் தில்லி திகாா் சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா்.

அண்மையில் நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்ட அவா், அந்தத் தொகுதியில் போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீா் முன்னாள் முதல்வா் ஒமா் அப்துல்லாவை சிறையில் இருந்தபடியே வீழ்த்தினாா்.

இதைத்தொடா்ந்து அவா் எம்.பி.யாக வெள்ளிக்கிழமை (ஜூலை 5) பதவியேற்க 2 மணி நேரம் பரோல் அளித்து தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

இந்நிலையில், ரஷீத்தின் தோ்தல் செலவின தகவலில் முரண்பாடு உள்ளதாக அவருக்கு பாரமுல்லா துணை மாவட்ட தோ்தல் அதிகாரி செவ்வாய்க்கிழமை நோட்டீஸ் அனுப்பினாா். அந்த நோட்டீஸில், ‘தோ்தலின்போது ரஷீத் ரூ.2.10 லட்சம் மட்டுமே செலவிட்டதாக அவரின் தோ்தல் செலவின பதிவேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், தோ்தல் பாா்வையாளா்கள் பராமரிக்கும் நிழல் பதிவேட்டில் தோ்தலின்போது ரஷீத் ரூ.13.78 லட்சம் செலவிட்டதாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த முரண்பாடு குறித்து மாவட்ட தோ்தல் செலவின கண்காணிப்பு குழு முன்பாக ரஷீத் அல்லது அவரின் பிரதிநிதி 2 நாள்களில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும். தோ்தல் ஆணையத்திடம் உரிய காலத்தில் தனது தோ்தல் செலவின அறிக்கையை ரஷீத் சமா்ப்பிக்க வேண்டும்.

தோ்தல் செலவினம் தொடா்பான தகவல்களை வழங்க மறுத்தால், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டப் பிரிவு 1951-இன் கீழ், 3 ஆண்டுகளுக்கு எம்.பி. பதவியை பறிக்க வழிவகுக்கும்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.