மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

ஜார்க்கண்ட் முதல்வராகிறார் ஹேமந்த் சோரன்! சம்பயி சோரன் ராஜிநாமா

ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் வழங்கினார்.

News image

ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் ராஜிநாமா கடிதம் வழங்கிய சம்பயி சோரன் - ஏஎன்ஐ

Updated On :3 ஜூலை 2024, 2:31 pm

ஜார்க்கண்ட் முதல்வர் சம்பயி சோரன் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ராஜிநாமா கடிதத்தையும் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணனிடம் அவர் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் எனத் தெரிகிறது.

ஆளுநரை சந்தித்தப் பிறகு செய்தியாளரகளுடன் பேசிய சம்பயி சோரன் தெரிவித்ததாவது, ''கடந்த சில நாள்களுக்கு முன்பு நான் முதல்வராக தேர்வு செய்யப்பட்டதால், மாநில நிர்வாக பொறுப்புகளை கவனித்துவந்தேன். தற்போது ஹேமந்த் சோரன் திரும்ப வந்துள்ளதால், கூட்டணி கட்சிகள் பேசி இந்த முடிவை எடுத்துள்ளோம். ஜார்க்கண்ட் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரனை தேர்வு செய்துள்ளோம். இதனால், தற்போது முதல்வர் பதவியிலிருந்து ராஜிநாமா செய்துள்ளேன்'' எனக் குறிப்பிட்டார்.

சம்பயி சோரனின் சகாப்தம் ஜார்க்கண்ட்டில் முடிந்துவிட்டதாக பாஜக எம்.பி. நிஷிகாந்த் தூபே விமர்சித்திருந்தார். இது தொடர்பாக சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டிருந்த அவர்,

ஜார்க்கண்ட்டில் சம்பயி சோரனின் சகாப்தம் முடிந்துவிட்டது. குடும்பக் கட்சியில் வெளிப்புற நபர்களுக்கு அரசியல் எதிர்காலம் இல்லை. பகவான் பிர்சா முண்டாடை உத்வேகமாகக் கொண்டு ஊழல்வாதி ஹேமந்த் சோரனுக்கு எதிராக முதல்வர் சம்பயி நிற்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.