ஆசியக் கோப்பை: இந்தியா 8-ஆவது முறை சாம்பியன்உயர்த்தப்பட்ட விலையில் 42,082 மெட்ரிக் டன் நெல் கொள்முதல்: தமிழ்நாடு அரசு ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம்: செப்.16 வரை தீவிர சிறப்பு தணிக்கை! உக்ரைன் தாக்குதல் அதிகரிப்பு: இந்திய எரிபொருள் இறக்குமதியை தொடர்ந்து அதிகரிக்கும் ரஷியாதொழில்நுட்பம்,கனிமங்களை ஆயுதமாக்கக் கூடாது: பிரிக்ஸ் நிறைவு அமர்வில் பிரதமர் மோடி!

ஜார்க்கண்ட் முதல்வராக பதவியேற்றார் ஹேமந்த் சோரன்!

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் பதவியேற்றுக் கொண்டார்.

முதல்வராக பதவியேற்ற ஹேமந்த் சோரன்

Published On :

ஜார்க்கண்ட் மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் மீண்டும் இன்று பதவியேற்றுக் கொண்டார்.

முன்னதாக ஜூலை 7ல் ஜார்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவியேற்பார் என்று முக்தி மோர்ச்சா கட்சி அறிவித்த சற்று நேரத்திலேயே இன்று மாலை 5 மணிக்கு பதவியேற்பதாக தகவல் வெளியானது.

அதன்படி, ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் இன்று பதவியேற்றுள்ளார். அவருக்கு ஜார்ககண்ட் ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமானம் செய்து வைத்தார்.

நில மோசடியுடன் தொடர்புள்ள சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் ஜாா்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜேஎம்எம் தலைவருமான ஹேமந்த் சோரனை அமலாக்கத் துறை கடந்த ஜன.31-ஆம் தேதி கைது செய்தது. இதைத் தொடா்ந்து, பின்னர், ஜேஎம்எம் கட்சியைச் சோ்ந்த மூத்த தலைவர் சம்பயி சோரன் மாநில முதல்வரானார்.

இதையடுத்த ஹேமந்த் சோரனுக்கு கடந்த ஜூன் 28-ஆம் தேதி ஜாா்க்கண்ட் உயா்நீதிமன்றம் ஜாமீன் அளித்தது. இந்த நிலையில், ராஞ்சியில் உள்ள சம்பயி சோரன் இல்லத்தில் ஜேஎம்எம் தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் எம்எல்ஏக்கள், தலைவா்கள் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்தக் கூட்டத்தில் ஜேஎம்எம் சட்டப்பேரவைக் குழுத் தலைவராக ஹேமந்த் சோரன் ஒருமனதாக தேர்வுசெய்யப்பட்டார். ஜாா்க்கண்ட் முதல்வராக ஹேமந்த் சோரனே மீண்டும் பதவியேற்கவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இதையடுத்து ஜார்க்கண்ட் முதல்வராக இருந்த சம்பயி சோரன் புதன்கிழமை தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

முன்னதாக, ஹேமந்த் சோரன் முதல்வராக பதவியேற்க ஆளுநரிடம் உரிமைக் கோரினார். இந்த நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக மீண்டும் ஹேமந்த் சோரன் இன்று மாலை பதவியேற்றுக்கொண்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.