உச்ச நீதிமன்றத்தில் நாளை காவிரி வழக்கு விசாரணை! மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புஅருணாசல்: திடீா் வெள்ளம், நிலச்சரிவில் 4 போ் உயிரிழப்பு! 5 ராணுவ வீரா்கள் மாயம்!டாஸ்மாக் கடைகளில் 11 வகை மதுபானங்களுக்கு விதிக்கப்பட்ட தடை ஒரே நாளில் நீக்கம்!பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான சிறப்பு கூடுதல் வரி குறைப்பு: மத்திய அரசு
/

ஜார்க்கண்ட்: ஹேமந்த் சோரன், ராகுலின் உருவ பொம்மைகள் எரித்துப் போராட்டம் நடத்தப்படும்!

ஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பேசியது பற்றி...

News image

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் செய்தித்தாள் வாசித்துக் கொண்டிருந்தபோது... - படம் - பிடிஐ

Updated On :16 ஆகஸ்ட் 2026, 10:11 am IST

ஜார்க்கண்ட்டில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள், “முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை எரிப்போம்” என்று எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் உள்ள ஜெய்பால் சிங் முண்டா திடலில் 23 வது நாளாக மாணவர்கள் போராடி வருகின்றனர்.

ஜார்க்கண்ட் பொது சேவை ஆணையம் (ஜேபிஎஸ்சி), ஜார்க்கண்ட் பணியாளர் தேர்வாணையம் (ஜேஎஸ்எஸ்சி) நடத்திய தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாகவும், ஓ.எம்.ஆர். தாள்களில் மோசடிகள் செய்யப்பட்டு தேர்வு முடிவுகளில் குளறுபடிகள் ஏற்பட்டதாகவும் குற்றம் சாட்டி, மாணவர்கள் ஜூலை 25 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் பேசியதாவது:

நாங்கள் 23 நாள்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். ஆனால் அரசு மௌனம் காத்து வருகிறது. முன்னதாக சட்டப்பேரவைக்குள் நாங்கள் அரசுடன் கலந்துரையாடினோம். ஆனால் அதன் பிறகு, அரசு எங்களை ஒருமுறை கூட பேச்சுவார்த்தைக்கு அழைக்கவில்லை. எங்கள் கோரிக்கைகளை அரசு புறக்கணிப்பதாக நாங்கள் உணர்கிறோம். எனவே, காந்திய வழியில் போராடுவதற்குப் பதிலாக, சுபாஷ் சந்திர போஸ் மற்றும் பகத் சிங் ஆகியோரின் பாதையைப் பின்பற்ற நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

இன்று (ஆக. 16), ஜார்க்கண்டின் 24 மாவட்டங்களிலும் முதல்வர் ஹேமந்த் சோரன் மற்றும் ராகுல் காந்தி ஆகியோரின் உருவ பொம்மைகளை நாங்கள் எரிப்போம். வரும் ஆகஸ்ட் 20 ஆம் தேதி முதல்வர் இல்லத்தை முற்றுகையிடவும் நாங்கள் முடிவு செய்துள்ளோம்.

எனவே, ஆகஸ்ட் 18 ஆம் தேதிக்குள் அரசு எங்கள் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டால், மகிழ்ச்சி. இல்லையெனில், ஜார்க்கண்ட் முழுவதிலும் உள்ள மாணவர்களும், இளைஞர்களும் முதல்வரின் இல்லத்தை முற்றுகையிடுவோம் என்று குறிப்பிட்டனர்.

Summary

Students protesting in Jharkhand have warned, "We will burn the effigies of Chief Minister Hemant Soren and Rahul Gandhi."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.