அமர்நாத்: 5 நாள்களில் ஒரு லட்சம் பேர் தரிசனம்!
வருடாந்திர அமர்நாத் யாத்திரை தொடங்கியுள்ள நிலையில் 5 நாள்களில் சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.
2024-ம் ஆண்டுக்கான அமர்நாத் யாத்திரை ஜூன் 29-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. அமர்நாத் யாத்திரையில் இந்தாண்டு முந்தைய ஆண்டுகளை விடக் கூடுதலான வசதிகள் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, ஐந்து நாள்களில் மட்டும் ஒரு லட்சத்திற்கு அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இந்த நிலையில் 5,696 பேர் கொண்ட மற்றொரு குழு இன்று காலை காஷ்மீருக்கு புறப்பட்டது.
2028 பேர் கொண்ட குழு 97 வாகனங்களில் வடக்கு காஷ்மீர் பால்டால் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.13-க்கு புறப்பட்டது. 3,668 பேர் மற்றொரு குழு தெற்கு காஷ்மீர் நுன்வான் அடிப்படை முகாமிலிருந்து அதிகாலை 3.40 மணிக்கு 122 வாகனங்களில் புறப்பட்டனர்.
குகை லிங்கத்தைத் தரிசிக்க இந்தாண்டு சுமார் 3.50 லட்சம் பக்தர்கள் முன்பதிவு செய்துள்ளனர். 52 நாள்கள் நடைபெறும் புனித யாத்திரை சுமுகமாக நடைபெற பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஆகஸ்ட் 19-ம் தேதியுடன் நிறைவடைகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.