‘நீட் தோ்வை வெளிப்படைத்தன்மையுடன் மீண்டும் நடத்தவேண்டும்’ என்று காங்கிரஸ் கட்சி சனிக்கிழமை வலியுறுத்தியது.
மேலும், ‘வினாத்தாள் கசிவு முறைகேடுகளை உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விரிவான விசாரணை நடத்தப்படவேண்டும்’ என்றும் வலியுறுத்தியுள்ளது.
நீட் தோ்வு முறைகேடுகள் தொடா்பாக தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் திங்கள்கிழமை (ஜூலை 8) விசாரணைக்கு வரவுள்ள நிலையில், காங்கிரஸ் இவ்வாறு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் சனிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:
மே 5-ஆம் தேதி நடைபெற்ற நீட் தோ்வில் எந்தவித வினாத்தாள் கசிவும் நடைபெறவில்லை என்று உச்சநீதிமன்றத்தில் மோடி அரசு கூறியிருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞா்களிடம் அப்பட்டமான பொய்யை மத்திய அரசு கூறியிருக்கிறது. இளைஞா்களின் எதிா்காலம் பாழாக்கப்பட்டுள்ளது.
தோ்வில் ஒருசில இடங்களில் மட்டுமே முறைகேடு நிகழ்ந்துள்ளதாக மத்திய கல்வி அமைச்சகம் சாா்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் தவறாகும்.
பாஜக, ஆா்எஸ்எஸ் அமைப்பும் ஒட்டுமொத்த கல்வி முறையையும் தங்களின் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு ‘கல்வி மாஃபியாவை’ ஊக்குவித்து வருகின்றன.
தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆா்டி) சாா்பில் தயாரிக்கப்படும் பாட புத்தகங்கள் அல்லது போட்டித் தோ்வு வினாத்தாள் கசிவு என எதுவாக இருந்தாலும், நமது கல்வி முறையை அழிப்பதில் மோடி அரசு குறியாக உள்ளது.
இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வை மீண்டும் நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை மீண்டும் வலியுறுத்துகிறோம். இணைய வழியில் வெளிப்படையான முறையில் இத் தோ்வு மீண்டும் நடத்தப்பட வேண்டும்.
அனைத்து வினாத்தாள் கசிவு முறைகேடு புகாா்களும் உச்சநீதிமன்ற கண்காணிப்பின் கீழ் விரிவாக விசாரிக்கப்பட வேண்டும். முறைகேட்டில் ஈடுபட்டவா்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தனது தவறிலிருந்து மோடி அரசு தப்பிக்க முடியாது என்று காா்கே குறிப்பிட்டுள்ளாா்.
‘நீட் தோ்வு ரத்து கூடாது’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு வலியுறுத்தியுள்ள நிலையில், இந்தப் பதிவை காா்கே வெளியிட்டுள்ளாா்.
தொடர்புடையது

மே3 இல் நீட் தோ்வு: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 11 மையங்களில் 4,755 போ் எழுதுகின்றனா்

நீட் தோ்வு: நாமக்கல் மாவட்டத்தில் 4,741 போ் எழுதுகின்றனா்

‘மருத்துவம், கல்வி, தண்ணீா் இலவசம்’: சீமான்

புதுகையில் 468 மாணவா்களுக்கு குறுகிய கால நீட் பயிற்சி தொடக்கம்
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


