வினாத்தாள் கசிவு விவகாரத்தில் நீட் கலந்தாய்வு ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய தகுதித் தேர்வு மற்றும் நீட் இளங்கலை நுழைவுத் தேர்வுகளுக்கான கலந்தாய்வு மறு தேதி வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 6 ஆம் தேதியான இன்று அனைத்திந்திய நீட்-யூஜி கலந்தாய்வு நடைபெறுவதாக இருந்தது. ஆனால், நீட் கலந்தாய்வு நடத்த உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்தது.
நீட் சம்பந்தமான அனைத்து மனுக்களும் வருகிற ஜூலை 8 ஆம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் ஜெ.பி. பர்டிவாலா, மனோஜ் மிஸ்ரா தலைமையில் விசாரிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மனுக்களில் சிலர் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர். சிலர் தேர்வை முழுமையாக ரத்து செய்து விட்டு மீண்டும் நடத்த வேண்டும் எனக் கூறியுள்ளனர். மேலும், சிலர் தேசிய தேர்வு முகமையின் நடைமுறைகளை குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
கலந்தாய்வுக்கு மருத்துவ நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற பிறகு, மாணவர்கள் முதலில் பதிவு செய்து, தொடர்புடைய செலவுகளைச் செலுத்த வேண்டும். தங்கள் விருப்பங்களை நிரப்பி, இதர ஆவணங்களையும் பதிவேற்ற வேண்டும்.
கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க மருத்துவ ஆலோசனைக் குழுவின் அதிகாரப்பூர்வ இணையதளமான https://mcc.nic.in/ லிங்க்கை பார்வையிடவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏப்ரல் 20ம் தேதி சிபிஎஸ்இ தேர்வு முடிவுகள்?

நாங்கள் ஒன்றாக பிரசாரம் செய்வதை பார்த்து சிலர் பயத்தின் உச்சத்தில் உள்ளனர்: டிடிவி தினகரன்

மேட்டுப்பாளையம் - திருநெல்வேலி வாராந்திர சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு

நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
வீடியோக்கள்

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை


