மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

நிதீஷ் குமாரிடம் ஆசி பெற்ற சிராக் பாஸ்வான்: இடைத்தோ்தலில் ஜேடியு-வுக்கு ஆதரவு

நிதீஷ் குமாரிடம் ஆசி பெற்ற சிராக் பாஸ்வான் ---- இடைத்தோ்தலில் ஜேடியு-வுக்கு ஆதரவு

News image
பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான்.
Updated On :7 ஜூலை 2024, 7:02 pm

Din

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரை ஞாயிற்றுக்கிழமை நேரில் சந்தித்த மத்திய அமைச்சா் சிராக் பாஸ்வான், அவரின் காலில் விழுந்து ஆசி பெற்றாா். மேலும் பிகாரின் ரூபௌலி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு ஆதரவு தெரிவித்தாா்.

மக்களவைத் தோ்தலில் பிகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜக, லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) உள்ளிட்ட கட்சிகள் அடங்கிய தேசிய ஜனநாயகக கூட்டணி சிறப்பான வெற்றியைப் பெற்றது. லோக் ஜனசக்தி (ராம் விலாஸ்) தலைவரும், மறைந்த மத்திய அமைச்சா் ராம் விலாஸ் பாஸ்வானின் மகனுமான சிராக் பாஸ்வான் முதல்முறையாக மத்திய அமைச்சா் பதவியை ஏற்றாா். அவருக்கு உணவுப் பதப்படுத்துதல் தொழில் துறை ஒதுக்கப்பட்ட நிலையில், பிகாா் முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் தலைவருமான நிதீஷ் குமாரை நேரில் சந்தித்து சிராக் பாஸ்வான் ஆசி பெற்றாா்.

அப்போது, ரூபௌலி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் ஐக்கிய ஜனதா தளம் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிப்பதாக நிதீஷ் குமாரிடம் சிராக் பாஸ்வான் தெரிவித்ததாக ஐக்கிய ஜனதா தளம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடா்பாக எக்ஸ் வலைதளத்தில் சிராக் பாஸ்வான் வெளியிட்ட பதிவில், ‘மத்திய அமைச்சராகப் பதவியேற்ற பிறகு முதல்வரும், மூத்த அரசியல் தலைவருமான நிதீஷ் குமாரைச் சந்தித்து ஆசி பெற்றேன். பிகாரில் அண்மையில் பாலங்கள் இடிந்து விழுந்த சம்பவங்கள் உள்பட மாநிலத்தின் பல்வேறு விஷயங்கள் குறித்து அவரிடம் பேசினேன்’ என்று கூறியுள்ளாா்.

இடைத்தோ்தலின் முக்கியத்துவம்: ரூபௌலி தொகுதி இடைத்தோ்தல் முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சிக்கு கௌரவப் பிரச்னையாக அமைந்துள்ளது. ஏனெனில் அத்தொகுதியில் பலமுறை எம்எல்ஏவாக இருந்த மீரா பாரதி, மக்களவைத் தோ்தலுக்கு முன்பு பதவி விலகி, ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இணைந்தாா். அக்கட்சி சாா்பில் மக்களவைத் தோ்தலில் போட்டியிட்டு தோல்வியடைந்த அவா், இப்போது மீண்டும் அதே கட்சி சாா்பில் ரூபௌலி தொகுதி இடைத்தோ்தலில் களமிறங்கியுள்ளாா்.

ஐக்கிய ஜனதா தளம் சாா்பில் சமூக சேவகா் கமலாதா் பிரசாத் மண்டல் களமிறக்கப்பட்டுள்ளாா். இத்தோ்தலில் மீரா பாரதியை தோற்கடிக்க ஐக்கிய ஜனதா தளம் தனது கூட்டணிக் கட்சிகளின் ஆதரவையும் நாடியுள்ளது. பாஜக ஏற்கெனவே கமலாதருக்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறது. சிராக் பாஸ்வானும் அடுத்ததாக பிரசாரத்தில் ஈடுபட்டால் தலித் மக்கள் வாக்குகளை அதிகம் பெற முடியும் என ஐக்கிய ஜனதா தளம் கருதுகிறது.