சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி

நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அதிருப்தி.

News image
உச்சநீதிமன்றம் - கோப்புப் படம்
Updated On :8 ஜூலை 2024, 10:33 am

DIN

சமூக ஊடகங்களில் நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் இன்று (ஜூலை 8) அதிருப்தி தெரிவித்தார்.

உச்சநீதிமன்ற கோடைக்கால விடுமுறை முடிவடைந்து இன்று (ஜூலை 8) மீண்டும் தொடங்கிய நிலையில், நீட் முறைகேடு வழக்கை தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் பார்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது.

இதில் தேசிய தேர்வு முகமைக்கு உச்சநீதிமன்ற நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சில கேள்விகளை எழுப்பினார்.

மேலும், 67 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றது தொடர்பாகவும் நீதிபதி சந்தேகம் எழுப்பினார்.

நீட் தேர்வு என்பது, 20 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்களின் வாழ்க்கை சார்ந்த விஷயம் என்பதால், இந்த விவகாரத்தில் அதிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தினார்.

இந்த ஆண்டு நீட் தேர்வு வினாத்தாள் கசிந்தது என்பது தெளிவாகத் தெரிவதாக சுட்டிக்காட்டினார். நீட் வினாத்தாள் கசிவு சமூக ஊடகங்களில் காட்டுத் தீ போல பரவியிருக்கும் என்றும், இதனால் முறைகேடு செய்து பயனடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் நீதிபதி குறிப்பிட்டார்.

ஒவ்வொரு ஆண்டும் நீட் வினாத்தாள் எப்போது இறுதி செய்யப்படுகிறது. எப்போது அச்சிடப்படுகிறது. எப்போது தேர்வு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது என்பது குறித்த விவரங்களை அளிக்க என்டிஏவுக்கு தலைமை நீதிபதி அறிவுறுத்தினார்.

சிலர் முறைகேட்டில் ஈடுபட்டுள்ள நிலையில், ஒட்டுமொத்த மாணவர்களின் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் வகையில், தேர்வுகளை ரத்து செய்ய வேண்டுமா? எனவும் கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரத்தில் எத்தனை பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது, மாணவர்கள் தவிர்த்து மற்றவர்கள் எத்தனை பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்ற விவகாரத்தை சமர்ப்பிக்கவும் தேசிய தேர்வு முகமைக்கு அறிவுறுத்தினார்.

ஒரு இடத்தில் மட்டும் நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை சார்பில் பதில் அளிக்கப்பட்டது.

இதனையடுத்து, வினாத்தாள் கசிவு குறித்து நீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு சுருக்கமான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டார்.

மேலும், நீட் வினாத்தாள் கசிந்த விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து அறிக்கை சமர்ப்பிக்க மத்திய அரசுக்கு உத்தரவிட்டு, வழக்கை ஜூலை 11ஆம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி டி.ஒய். சந்திரசூட்.

இளநிலை மருத்துவப் படிப்பு சோ்க்கைக்கான நீட் தோ்வு தொடங்குவதற்கு முன்பே பிகாா் மாநில மையத்தில் வினாத்தாள் கசிந்தது. இது தொடர்பாக பலதரப்பில் இருந்து புகார்கள் எழுந்தன.

நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடிகள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப்பெண்கள் எடுத்தது என பல்வேறு புகார் மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் குவிந்தன.

இந்த மனுக்களை விசாரித்த உச்சநீதிமன்ற கோடைக்கால அமர்வு, சில உத்தரவுகளை பிறப்பித்திருந்தது. அதன்படி, சில மாணவர்களுக்கு வழங்கப்பட்ட கூடுதல் மதிப்பெண்கள் ரத்து செய்யப்பட்டு அவர்களுக்கு மட்டும் மறுதேர்வு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.