ராகுல் பிரதமராவதற்கு கடுமையாக உழைக்க வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி காங்கிரஸ் தொண்டர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தெலங்கானாவின் ஆளுநர் மாளிகையில், முன்னாள் முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டியின் 75 ஆவது பிறந்தநாள் இன்று கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியும் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில், ராகுல் காந்தி பிரதமராவதற்கு உதவுமாறு ரேவந்த் ரெட்டி கேட்டுக் கொண்டார்.
ரேவந்த் ரெட்டி பேசியதாவது, ``ஒய்.எஸ்.ஆர். 2009-ல் இரண்டாவது முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு ராகுல் காந்தி இந்தியாவின் பிரதமராக வருவார் என்று கூறினார். ஆனால், ராகுல் பிரதமராவதற்கு முன்பே ஒய்.எஸ்.ஆர். நம்மை விட்டுப் பிரிந்து சென்றுவிட்டார். ஆகையால், ராகுலை பிரதமராக்க அனைத்து காங்கிரஸ் தொண்டர்களும் கடுமையாக உழைக்க வேண்டும்.
ராகுல் எதிர்க்கட்சித் தலைவராகக் கடுமையாக உழைத்து வருகிறார். அவர் 2004 முதல் 2014 வரையில் எந்த நேரத்திலும் பிரதமராக ஆகியிருக்கலாம். ஆனால், ராகுலுக்கு பதவிகள் முக்கியமல்ல. இருப்பினும், அவருடைய தலைமையின்கீழ் மட்டுமே நாடு வளர்ச்சியடையும். அவர் பிரதமர் பதவியை ஏற்க இன்னும் ஒரு படி மட்டுமே உள்ளது. ராகுலை அடுத்த பிரதமராக்க கடுமையாக உழைப்பவர்களே ஒய்.எஸ்.ஆரின் உண்மையான ஆதரவாளர்கள்” என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்
தினப்பலன்கள் - கும்பம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாள்! பிரதமர் மோடி, அமித் ஷா வாழ்த்து; சசிகலா முக்கிய முடிவு!

சந்திரசேகர் ராவ் மகள் கவிதா புதிய கட்சி தொடங்குகிறார்!

தெலங்கானா உள்ளாட்சித் தோ்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி: ராகுல், கார்கே பெருமிதம்!
வீடியோக்கள்

புருஷன் படத்தின் மேக்கிங் விடியோ!
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | பயம் காட்டிய பெத்தெல்: இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது இந்தியா! | T20 World Cup | #msdhoni
தினமணி வீடியோ செய்தி...

அதிரடியான மேற்கிந்தியத் தீவுகள்: அரையிறுதி செல்லுமா இந்தியா?
தினமணி வீடியோ செய்தி...

பழைய டெம்ப்ளேட்டுக்கு திரும்பிய இந்தியா: இனி சிங்கப் பாதை தான்!
தினமணி வீடியோ செய்தி...

