3 மடங்கு வலிமையுடன், அதிவேகத்தில் பணியாற்றுவேன்: ரஷியாவில் மோடி உரை

மூன்றாவது முறையாக பிரதமரான பிறகு, முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்கள் மத்தியில் மோடி உரை.
பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

ரஷியாவுக்கு மூன்று நாள்கள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, மாஸ்கோவில் புலம்பெயர்ந்த இந்திய மக்கள் மத்தியில் செவ்வாய்க்கிழமை உரையாற்றினார்.

முன்னதாக, நேற்று ரஷிய அதிபர் புதினின் விருதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்றிருந்தார். தொடர்ந்து, இந்தியா - ரஷியா உச்சி மாநாட்டில் இரு நாட்டுத் தலைவர்களும் இன்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளனர்.

இதற்கிடையே, மாஸ்கோவில் இந்திய மக்கள் மத்தியில் பிரதமர் மோடி பேசியதாவது:

“மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பிறகு, முதல்முறையாக புலம்பெயர்ந்த இந்தியர்களுடன் உரையாடுகிறேன். இன்று, ஜூலை 9, நான் மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராகப் பதவியேற்று ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது. 3 மடங்கு வலிமையுடன், 3 மடங்கு அதிக வேகத்தில் பணியாற்றுவேன் என்று சபதம் எடுத்திருந்தேன். இம்முறை இந்தியாவை உலகின் மூன்றாவது பொருளாதாரமாக மாற்றுவதே இலக்கு.

இந்த முறை ஏழைகளுக்கு மூன்றாவது கட்டமாக 3 கோடி வீடுகள் வழங்கப்படவுள்ளது. 3 கோடி கிராம பெண்களை லட்சாதிபதி ஆக்குவதே அரசின் இலக்கு. இந்தியாவில் உள்ள மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு முன்னுரிமை அளித்து அவர்களின் ஆண்டு வருமானம் ரூ. ஒரு லட்சமாக மாற்றுவோம்.

இன்றைய இந்தியா, தான் நிர்ணயித்த இலக்கை அடைவதை உறுதி செய்கிறது. உலகில் வேறு எந்த நாடும் சென்றடைய முடியாத நிலவின் பகுதிக்கு சந்திரயானை வெற்றி அடையச் செய்த நாடு இந்தியா. டிஜிட்டல் பரிவர்த்தனையில் உலகுக்கு நம்பகமான மாதிரியை வழங்கும் நாடு இந்தியா.

பிரதமர் நரேந்திர மோடி
இந்தியாவின் வளர்ச்சி வேகத்தை கண்டு உலக நாடுகள் வியப்பு: மோடி

உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சூழலைக் கொண்ட நாடு இந்தியா. 2014-ல் முதல்முறையாக பதவியேற்ற போது இந்தியாவில் 100 ஸ்டார்ட் அப் மட்டுமே இருந்தது, தற்போது லட்சக்கணக்கான நிறுவனங்கள் உள்ளன.

இன்றைக்கு பல்வேறு காப்புரிமைகளை தாக்கல் செய்தும், ஆய்வுக் கட்டுரைகளை பதிவு செய்தும் சாதனை படைக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com