உ.பி.யில் பாலஸ்தீனக் கொடியை ஏந்திச் சென்ற இளைஞர் கைது!

உத்திரப்பிரதேசத்தில் மொகரம் ஊர்வலத்தின்போது பாலஸ்தீனக் கொடியை ஏந்திச் சென்ற இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோப்புப் படம்
கோப்புப் படம்

உத்திரப்பிரதேசத்தின் பதோஹி நகரில் மொகரம் ஊர்வலத்தில் பாலஸ்தீனக் கொடியை ஏந்தி வந்ததாகக் கூறி 2 இளைஞர்கள் மீது வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

கடந்த ஞாயிறன்று (ஜூலை 7) உத்திரப்பிரதேசத்தின் பதோஹி நகரில் நடைபெற்ற மொகரம் ஊர்வலத்தில் சில இளைஞர்கள் பாலஸ்தீன் நாட்டின் கொடியை ஏந்தி வந்ததுடன், பாலஸ்தீன் ஆதரவு கோஷங்களையும் எழுப்பியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட காணொளி சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அந்தக் காணொளியை ஆராய்ந்த காவல்துறையினர் சாஹில் (எ) பாதுஷா மற்றும் முகமது கோராக் என்ற இரு இளைஞர்கள் ஊர்வலத்தில் இருசக்கர வாகனத்தில் பாலஸ்தீனக் கொடிகளை ஏந்தியிருப்பதை அடையாளம் கண்டனர். மேலும், அவர்கள் ஊர்வலத்திற்கு அனுமதி வாங்கவில்லை என்பதும் தெரிய வந்துள்ளது.

கோப்புப் படம்
100-க்கும் மேற்பட்ட பாம்புகளைக் கால்சட்டைக்குள் மறைத்துக் கடத்தியவர் கைது!

இதனைத் தொடர்ந்து, அவர்கள் இருவர் மீதும் தேசிய ஒருமைப்பாட்டிற்கு களங்கம் விளைவிப்பதாகவும், மக்களிடையே வெறுப்புணர்வைத் தூண்டும் விதமாக நடந்து கொண்டதாகவும் கூறி பாரதிய நியாய சன்ஹிதா பிரிவு 197-ன் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதில் சலூன் கடை நடத்தி வரும் 20 வயதான பாதுஷாவைக் கைது செய்துள்ள காவல்துறையினர் கோரக் என்பவரைத் தேடி வருகின்றனர்.

மேலும், காணொளியை மீண்டும் ஆராய்ந்து மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com