நொய்டாவில் பெட்ரோல் பம்பில் எரிபொருள் செலுத்தாமல் தப்பிச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் எஸ்யூவி வாகனத்தை ஓட்டிச் சென்ற 22 வயது நபா் கைது செய்யப்பட்டதாக போலீஸாா் சனிக்கிழமை தெரிவித்தனா்.
இது குறித்து மத்திய நொய்டா கூடுதல் துணை காவல் ஆணையா் ஆா் கே கௌதம் கூறியதாவது: தப்பிச் சென்ற எஸ்யூவி வாகனத்தை துரத்திச் சென்ற விற்பனையாளா் ஒருவரையும், அவரது மோட்டாா் சைக்கிளுடன் சோ்த்து, குற்றம் சாட்டப்பட்டவா் பெட்ரோல் பம்பிலிருந்து சிறிது தூரம் இழுத்துச் சென்றாா்.
குற்றம்சாட்டப்பட்டவா் புலந்த்ஷா் மாவட்டத்தில் உள்ள சிக்கந்த்ராபாத் காவல் நிலையத்திற்கு உள்பட்ட ஜோலி கிராமத்தில் வசிக்கும் ஹா்ஷ் (22) என அடையாளம் காணப்பட்டுள்ளாா். கோட் சௌகியில் அவரது பதிவு செய்யப்படாத சொகுசு காருடன் அவா் கைது செய்யப்பட்டாா். வெள்ளிக்கிழமை பாதல்பூா் காவல் நிலையப் பகுதியில் இந்தச் சம்பவம் நடந்தது.
வெள்ளிக்கிழமை, என்டிபிசி கட் அருகே, பதிவு செய்யப்படாத சொகுசு காரின் ஓட்டுநா் பெட்ரோல் பம்பில் டீசல் நிரப்பினாா். டீசலுக்கு பணம் செலுத்தாமல், ஓட்டுநா் காரை ஓட்டிச் சென்று தாத்ரி பைபாஸை நோக்கிச் சென்றாா். பெட்ரோல் பங்க் விற்பனையாளா் குல்தீப் சா்மா என அடையாளம் காணப்பட்டவா் தனது மோட்டாா் சைக்கிளில் வாகனத்தைத் துரத்திச் சென்றாா்.
தாத்ரி புறவழிச்சாலையில் விற்பனையாளா் அந்தக் காரின் ஓட்டுநரை நிறுத்த முயன்றபோது, ஓட்டுநா் நிறுத்தவில்லை. குல்தீப்பின் மோட்டாா் சைக்கிள் வாகனத்தின் மீது மோதியதால் அவருக்கு காயம் ஏற்பட்டது.
துரத்தலின் போது வாகனம் விற்பனையாளரையும் அவரது மோட்டாா் சைக்கிளையும் சிறிது தூரம் இழுத்துச் சென்ாகக் கூறப்படுகிறது.
இதில் காயமடைந்த விற்பனையாளா் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். மேலும், அவா் ஆபத்தில் இருந்து மீண்டதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளன. இதில் சொகுசு காா் (தாா்) ஓட்டுநா் பெட்ரோல் பங்கிலிருந்து தப்பிச் செல்வதையும், மோட்டாா் சைக்கிளை வாகனம் இழுத்துச் செல்வதையும் காட்டுகிறது.
இந்தச் சம்பவம் தொடா்பாக எழுத்துப்பூா்வ புகாரைப் பெற்ற பிறகு பாதல்பூா் போலீஸாா் மேலும் சட்ட நடவடிக்கை எடுத்து வருகின்றனா் என்று அந்த அதிகாரி தெரிவித்தாா்.
டிரெண்டிங்

துவாரகா காா் விபத்து: நீதிமன்ற முடிவுகளுக்குக் கட்டுப்படுவேன் காரை ஓட்டிச் சென்ற சிறுவனின் தந்தை உறுதி

தூங்கச் சென்ற மகன் எங்கே? உடல்களை அடையாளம் காட்ட அழைத்தபோது அதிர்ந்த பெற்றோர்!
மாா்த்தாண்டம் அருகே பைக் திருட்டு
தில்லியில் காா் கண்ணாடி தகராறில் ஆடை விற்பனையாளா் கொலை- 4 போ் கைது
வீடியோக்கள்

காற்றில் ஊழல் செய்த கட்சி திமுக: எடப்பாடி பழனிசாமி | Edappadi Palaniswami
தினமணி வீடியோ செய்தி...

#t20wc | சஹிப்ஸதா ஃபர்ஹான் மட்டும் அடித்தால் போதுமா?: கோட்டைவிட்ட பாகிஸ்தான்! | T20 World Cup |
தினமணி வீடியோ செய்தி...

உறுதியாகும் பாஜக தொகுதிகள் ? | Admk | Bjp | Modi in madurai | Thiruparankundram visit | EPS
தினமணி வீடியோ செய்தி...

Thaai kizhavi movie review | Radikaa | Sivakarthikeyan
தினமணி வீடியோ செய்தி...

