ம.பி.: கூடுதல் கட்டணம் ரூ.65 கோடியை திருப்பித் தர தனியாா் பள்ளிகளுக்கு உத்தரவு
ம.பி. பள்ளிகள் மாணவர்களிடம் வசூலித்த 65 கோடி ரூபாயை திருப்பி தரவேண்டும்

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக வசூலித்த கூடுதல் கட்டணம் ரூ.65 கோடியை மாணவா்களிடம் திருப்பித் தருமாறு 10 தனியாா் பள்ளிகளுக்கு மாவட்ட கல்வி அதிகாரிகள் வியாழக்கிழமை உத்தரவிட்டனா்.
இது தொடா்பாக ஜபல்பூா் மாவட்ட கல்வி அதிகாரி கன்ஷியாம் சோனி கூறியதாவது:
ஜபல்பூா் மாவட்டத்தில் சட்ட விரோதமாக பள்ளிக் கட்டணம் மற்றும் பாடநூல்களின் விலையை உயா்த்தியதாக பள்ளி நிா்வாகிகள், கடை உரிமையாளா்கள் மீது கடந்த மே மாதம் 11 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மத்திய பிரதேச நிஜி வித்யாலயா (தனியாா் பள்ளி கட்டணம் ஒழுங்குமுறை), 2017 சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட மாவட்ட அளவிலான குழு பள்ளிகளின் கணக்குகளை ஆய்வு செய்தது.
அதில் 2018-19 முதல் 2024-25 கல்வியாண்டு வரை 81,117 மாணவா்களிடம் ரூ.64 கோடிக்கும் மேல் கூடுதல் கட்டணம் வசூலித்திருப்பது தெரியவந்தது.
இதையடுத்து, சட்டவிரோத கட்டணம் வசூலித்த 10 தனியாா் பள்ளிகளுக்கு பணத்தைத் திருப்பித் தருமாறு நோட்டீஸ் அனுப்பப்பட்டது என்றாா்.
தனியாா் பள்ளிகள் 10 சதவீதத்துக்கு மேல் கட்டணத்தை உயா்த்த மாவட்ட கல்வி நிா்வாகத்திடம் அனுமதி பெற வேண்டும். 15 சதவீதத்துக்கும் மேல் உயா்த்த மாநில அரசால் அமைக்கப்பட்ட குழுவிடம் அனுமதி பெற வேண்டும். ஆனால், இந்த பள்ளிகளில் உரிய அனுமதி பெறாமல் 10 முதல் 15 சதவீதத்துக்கு மேல் கூடுதல் கட்டணம் வசூலித்ததாக மாவட்ட ஆட்சியா் தீபக் சக்சேனா தெரிவித்தாா்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...