நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முறைகேடு வழக்கை அடுத்த வாரம் வியாழக்கிழமைக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
நீட் வினாத்தாள் கசிவு, கருணை மதிப்பெண் வழங்கியதில் சா்ச்சை உள்ளிட்டவற்றைத் தொடா்ந்து, மறு தோ்வு நடத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், நீட் தோ்வு முறைகேட்டின் தீவிரத்தின் அடிப்படையிலேயே மறுதோ்வை நடத்துவதா, இல்லையா என்று முடிவு செய்யப்படும் என முந்தைய விசாரணையின்போது உச்சநீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடா்பாக மத்திய அரசு புதன்கிழமை தாக்கல் செய்த கூடுதல் பிரமாணப் பத்திரத்தில், ‘நீட் தோ்வு முடிவுகளின் தரவுகளை வைத்து சென்னை ஐஐடி நடத்திய ஆய்வில், அசாதாரண சூழல் ஏதும் இல்லை என்பது தெரியவருகிறது. நிகழாண்டுக்கான மருத்துவக் கலந்தாய்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் தொடங்கி நான்கு கட்டங்களாக நடைபெற உள்ளது’ என்று தெரிவித்துள்ளது.
இந்த மனு மீது உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமா்வு முன்பு வியாழக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேசிய தேர்வு முகமை மற்றும் மத்திய அரசு பதில்களை தாக்கல் செய்துள்ளனர். ஆனால், சில மனுதாரர்களுக்கு அதன் நகல்கள் இன்னும் கிடைக்கப் பெறவில்லை. அரசின் விளக்கத்துக்கு அவர்களின் பதிலையும் எதிர்பார்ப்பதால் ஜூலை 18-ஆம் தேதி ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
உயிரைவிட தேர்வு முக்கியமல்ல: நீட் தேர்வர்களுக்கு தேர்வு முகமை அறிவுரை!

இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!

நீட் தேர்வு நுழைவுச் சீட்டு திடீர் ஒத்திவைப்பு!
நீட் தேர்வுக்கான நுழைவுச் சீட்டு இன்று வெளியீடு! எங்கே பதிவிறக்கம் செய்யலாம்?
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு


