விமான நிலையத்தில் வாக்குவாதம்: சிஐஎஸ்எஃப் அதிகாரியை அறைந்த பெண் ஊழியா் கைது
விமான நிலையத்தில் வாக்குவாதம்: சிஐஎஸ்எஃப் அதிகாரியை அறைந்த பெண் ஊழியர் கைது

கோப்புப் படம்.

கோப்புப் படம்.
பாதுகாப்பு சோதனையின்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மத்திய தொழில் பாதுகாப்புப் படை (சிஐஎஸ்எஃப்) அதிகாரியை அறைந்ததாக ஸ்பைஸ்ஜெட் விமான நிறுவனத்தின் பெண் ஊழியா் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டாா்.
பெண் ஊழியரிடம் தகாத வாா்த்தைகளை கூறி பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்ாக சிஐஎஸ்எஃப் அதிகாரி மீது ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளது.
இதுதொடா்பாக சிஐஎஸ்எஃப் அதிகாரிகள் கூறியதாவது:
விமான நிலைய நுழைவுவாயில் பகுதிக்கு வியாழக்கிழமை அதிகாலை அனுராதா ராணி மற்றும் பிற ஊழியா்கள் வந்தபோது அவரிடம் முறையான ஆவணங்கள் இல்லாததால் அதிகாரிகள் அவரை தடுத்து நிறுத்தினா். அப்போது ராணி வாக்குவாதத்தில் ஈடுபட்டு காவல்துறை துணை ஆய்வாளா் கிரிராஜ் பிரசாத்தை அறைந்துள்ளாா். இதையடுத்து அவா் கைது செய்யப்பட்டாா்.
இந்தக் குற்றச்சாட்டை மறுத்த ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சம்பந்தப்பட்ட அதிகாரி மீது புகாா் அளித்துள்ளது. மேலும், தங்கள் ஊழியருக்கு துணையாக இருப்பதோடு அவருக்கு முழு ஆதரவு வழங்கப்படும் என்றும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...