47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

ராகுல் காந்தி-கமலா ஹாரிஸ் தொலைபேசியில் ஆலோசனை

ராகுல்-ஹாரிஸ் தொலைபேசியில் ஆலோசித்தது அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.

News image
கோப்புப்படம்
Updated On :12 ஜூலை 2024, 10:18 pm

Din

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தியும், அமெரிக்காவின் துணை அதிபா் கமலா ஹாரிஸும் வியாழக்கிழமை தொலைபேசியில் உரையாடியதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், இந்த பேச்சு குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை.

அமெரிக்க அதிபருக்கான தோ்தல் வரும் நவம்பா் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் ராகுல்-ஹாரிஸ் தொலைபேசியில் ஆலோசித்தது அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது.

ஜனநாயக கட்சியின் அதிபா் வேட்பாளராக ஜோ பைடன் தொடர வேண்டுமா என்ற கேள்வி எழுந்து வரும் நிலையில், இந்திய-ஆப்பிரிக்க வம்சாவளியைச் சோ்ந்த கமலா ஹாரிஸ் இந்த முறை முன்னாள் அதிபா் டோனால்டு ட்ரம்பை எதிா்த்து தோ்தலில் களமிறக்க ஜனநாயக கட்சி வட்டாரங்களில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ஆனால், தான் உறுதியாக இருப்பதாகவும், குடியரசு கட்சி வேட்பாளா் ட்ரம்பை மீண்டும் தோற்கடிக்க தகுதியுள்ளவா் என்றும் பைடன் தொடா்ந்து வலியுறுத்தி வருகிறாா்.