கோவாவில் நடைபெற்ற பாஜகவின் செயற்குழு கூட்டத்தில் நிதின் கட்கரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
கோவாவின் தாலிகாவோவில் பாஜகவின் செயற்குழு கூட்டம் இன்று (ஜூலை 12) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, கோவா முதல்வர் பிரமோத் சாவந்த், பாஜக தலைவர் சதானந்த் ஷெட் தனவாடே மற்றும் பலரும் கலந்து கொண்டனர்.
அந்த கூட்டத்தில் நிதின் கட்கரி பேசியதாவது, ``காங்கிரஸ் செய்த தவறுகளுக்காகவே மக்கள் பாஜகவை தேர்ந்தெடுத்துள்ளனர். நாமும் அதே தவறுகளைச் செய்தால், காங்கிரஸ் வெளியேறுவதிலும், நாம் ஆட்சிக்கு வருவதிலும் எந்த அர்த்தமும் இருக்காது. மற்ற கட்சிகளிலிருந்து நாம் எவ்வளவு வித்தியாசமாக இருக்கிறோம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
சாதி அடிப்படையிலான அரசியலைப் பின்பற்ற வேண்டாம் என்று நான் முடிவு செய்துள்ளேன். நான் சாதி அடிப்படையிலான அரசியலில் ஈடுபட மாட்டேன் என்பதை மக்களுக்கு தெளிவுபடுத்தியுள்ளேன். மேலும், சாதியைப் பற்றி யார் பேசினாலும் அவர்களுக்கு வலுவான உதை கிடைக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.