சாத்தூரில் போட்டி: நயினார் நாகேந்திரன் அறிவிப்பு! பாஜகவுக்கு சாதகமில்லாத தொகுதிகள்! மேலிடத்தில் அண்ணாமலை அதிருப்தி! டாலருக்கு நிகரான இந்திய மதிப்பு ரூ. 94 -ஐ கடந்தது! வரலாறு காணாத வீழ்ச்சி! பெட்ரோல் மீதான கலால் வரி குறைப்பு! டீசலுக்கு முழுமையாக ரத்து! ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்
/

ஜம்மு - காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை!

ஜம்மு - காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி நுழைந்த 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

News image

கோப்புப் படம்

Updated On :14 ஜூலை 2024, 4:27 pm

DIN

ஜம்மு - காஷ்மீர் எல்லை கட்டுப்பாட்டு பகுதியில் அத்துமீறி ஊடுருவிய 3 பயங்கரவாதிகளை ராணுவ வீரர்கள் சுட்டு வீழ்த்தினர்.

சமீபத்தில் குல்கம் மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நுழைந்தபோது நடந்த தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் வீர மரணமடைந்த நிலையில், எல்லைப் பகுதியில் கணிகாணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஜம்மு - காஷ்மீரின் குப்வாரா பகுதியில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டு பகுதியில் பயங்கரவாதிகள் ஊடுருவியதாக தகவல் கிடைத்தது.

இதனையடுத்து குப்வாரா பகுதிக்குட்பட்ட கேரன் செக்டாரில் பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுமட்டுமின்றி, குப்வாரா மாவட்டத்தில் தேடுதல் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், பாதுகாப்புப் படையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.