காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் -கர்நாடக அரசு
காவிரி விவகாரம்: தமிழகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயார் -கர்நாடக துணை முதல்வர்


காவிரியில் தமிழகத்துக்கான பங்கு நீரை விடுவிக்காமல் கா்நாடகம் தொடா்ந்து பிடிவாதம் பிடித்து வருகிறது. ஜூலை 12 முதல் 31 -வரை விநாடிக்கு 11,500 கன அடி வீதம் தினமும் 1 டிஎம்சி தண்ணீா் திறக்க வேண்டும் என்று காவிரி ஒழுங்காற்றுக்குழு உத்தரவிட்டுள்ளது.
இந்த உத்தரவுப்படி தமிழ்நாட்டுக்கு விடுவிக்க வேண்டிய நீரை விடுவிக்க இயலாது என்று கா்நாடக அரசு தெரிவித்திருப்பது மிகுந்த அதிா்ச்சியை அளிக்கிறது. தினமும் விநாடிக்கு 8 ஆயிரம் கன அடிவீதம் மட்டுமே தண்ணீா் தர இயலும் என்று கா்நாடகம் கூறியுள்ளது.
இந்த நிலையில், பெங்களூரில் செவ்வாய்க்கிழமை(ஜூலை 16) செய்தியாளர்களுடன் பேசிய அம்மாநில துணை முதல்வர் டி.கே.சிவகுமாா் கூறியதாவது, “தமிழகத்தைப் போலவே கர்நாடகத்திற்கு தண்ணீர் தேவை உள்ளது. தமிழகத்துக்கான தண்ணீர் தேவையை நாங்கள் நிராகரிக்கவில்லை. காவிரியில் நேற்றிலிருந்து 50,000க்கும் அதிகமாக நீர் வரத்து இருந்து வருகிறது. தமிழகத்துக்கு ஒரேயொரு கோரிக்கை வைக்கிறோம். இருமாநில தேவையை ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் நீர் தேவைக்கே முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அணைகளில் நீர் வரத்து மற்றும் கொள்ளளவுக்கேற்பவே காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியும். இதுவே கர்நாடக மக்களின் சார்பாக, பணிவான கோரிக்கையாக முன்வைக்கிறோம். தமிழகத்துக்கு அனைத்து விதத்திலும் ஒத்துழைப்பு வழங்க தயார்” எனக் கூறியுள்ளார்.
இwத நிலையில், காவிரி நீரைப் பெறுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து பேரவையில் இடம்பெற்றுள்ள அனைத்துக் கட்சிகளின் தலைவா்களுடன் ஆலோசனைக் கூட்டம் செவ்வாய்க்கிழமை (ஜூலை 16) நடைபெறுகிறது. அவை முன்னவரும் நீா்வளத் துறை அமைச்சருமான துரைமுருகன் தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து, சட்ட வல்லுநா்களின் கருத்துகளும் கோரப்படும். இதன் அடிப்படையில், தமிழ்நாடு அரசு அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்ய உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...