சிஜேபி போராட்டம் தொடர்பான வழக்குகளைத் திரும்பப்பெற மாநிலங்களுக்கு முழு சுதந்திரம் உண்டு - உச்ச நீதிமன்றம்பிகார் இடைத்தேர்தலில் பிரசாந்த் கிஷோர் வெற்றி! பாஜகவின் கோட்டையைக் கைப்பற்றினார்!பிரிஜ் பூஷணைப் பாதுகாக்கும் அரசு இயந்திரம்! விரைவில் மேல்முறையீடு! வினேஷ் போகத் செங்கல்பட்டு உள்பட 8 மாவட்டங்களில் இன்று கனமழை!துரித வேகத்தில் சென்னை அண்ணா சாலை உயர்நிலை சாலை பணிகள்! நவம்பரில் திறக்கப்படுமா?பயன்படுத்தாத வங்கிக் கணக்கில் பணம் இருக்கிறதா? என்ன செய்யலாம்?ஆடிப் பெருக்கு! தாமிரபரணி நதிக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு பூஜை!!மோடி அரசு, பணக்காரர்களுக்கான ஆட்சி! ரமணா பட பாணியில் புள்ளி விவரங்களுடன் மாணிக்கம் தாகூர் பேச்சு!திருப்பரங்குன்றம் வழக்கு: இடைக்கால உத்தரவு பிறப்பிக்க முடியாது! உச்ச நீதிமன்றம்காவிரி தீர்ப்பைக் கூட காப்பாற்ற முடியாத அரசுதான் தவெக: இபிஎஸ்மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் வழக்கு! பிரிஜ் பூஷண் விடுதலை!திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயனுக்கு நிபந்தனை ஜாமீன்!தீரன் சின்னமலையின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கட்டும்! முதல்வர் விஜய்
/

கோடைக்காலம் வருகிறது.. குளிர்பானங்கள் செய்ய தயாராவோம்!

கோடைக்காலம் வருகிறது என்பதால் குளிர்பானங்களை வீட்டிலேயே செய்வது குறித்துப் பார்க்கலாம்..

News image

கோடைக்காலம் - Center-Center-Delhi

Updated On :28 பிப்ரவரி 2026, 1:18 pm IST

வெயிலின் தாக்கத்தைக் குறைக்க உதவும் பல்வேறு நடவடிக்கைகளில் குளிர்பானங்களும் ஒன்று. வெளியில் செல்லும்போது கோடை வெப்பத்தின் தாக்கத்தை குளிர்பானங்களால் குறைக்க முடியும்.

குளிர்பானங்கள் என்றால் கடைகளில் வண்ண வண்ண நிறங்களில் விற்பனையாகும் விஷ பானங்கள் அல்ல. பாரம்பரிய முறையில், புத்துணர்வும் உடலுக்கு சக்தி ஊட்டக் கூடிய ஆரோக்கியமான குளிர்பானங்கள்தான்.

அவற்றை வீட்டிலேயே குறைந்த விலையில் சத்தான முறையில் தயாரிக்க முடியும்.

முதலில் தண்ணீர் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். வெயிலுக்கு குளிர்ந்த நீர் பருகலாம் என்று நினைப்பது தவறு. எப்போதும் கையில் சுத்தமான தண்ணீரை வைத்துக் கொள்ளுங்கள். நிறைய தண்ணீர் குடிக்க வேண்டும். முடிந்தவர்கள் பானையில் தண்ணீர் ஊற்றிக் குடிக்கலாம்.

வெறும் மோர் அல்ல... மசாலா மோர்

தயிருடன் தண்ணீர், உப்பு மட்டும் சேர்க்காமல் மசாலா பொருள்களைச் சேர்த்து நன்றாகக் கலந்து நுரையுடன் பரிமாறப்படும் சுவையான பானம்.

இதில் சுவைக்கு ஏற்ப சற்று பெருங்காயம், ஒமம் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம். இது தாகத்தைத் தீர்ப்பதோடு உடல் சூட்டையும் தணிக்கும்.

தயிர் பிடிக்கும் என்றால் லஸ்லியும் பிடிக்கும்

தயிருடன் சர்க்கரை, சிறிதளவு தண்ணீர், சில நறுமணப் பொருள்கள் சேர்த்து தயாரிக்கலாம்.

இதில், கால்சியம், வைட்டமின் பி 12, துத்தநாகம், புரோட்டீன் உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய சத்துகள் அதிகமாகவே உள்ளன. குழந்தைகளுக்கும் நல்ல சிற்றுண்டியாக இருக்கிறது.

எலுமிச்சைச் சாறு

இப்போதெல்லாம் சிலர் சோடாவுடன் எலுமிச்சை சாறு கலந்து குடிக்கிறார்கள். ஆனால் எலுமிச்சை சாறு என்பது மிக எளிதாகச் செய்யக் கூடிய பானமாகும். வேறு எந்த பானத்துக்கும் இது குறைந்ததல்ல. வைட்டமின் சி, பி மற்றும் தாது உப்புகள் நிறைந்த பானமாகும்.

சீரகம் கலந்த நீர்

வெறும் தண்ணீர் குடிப்பதால் ஒரு பலனும் இல்லை. சீரகம், நீர், மிளகு, புதினா கலந்த பானம் பசியைத் தூண்டுவதோடு புத்துணர்வையும் அளிக்கும். புளிப்பு, கார சுவையுடையது.

கரும்புச் சாறு அமோகம்

கரும்புச் சாறுக்கு கோடைக்காலத்தில் நல்ல வரவேற்பு உண்டு. இது உடலுக்கு புத்துணர்வை அளிக்கும். மிகவும் விலை குறைந்த பானம். நல்ல முறையில் தயாரிக்கப்படும் கரும்பு சாறுகளை வாங்கிப் பருகலாம்.

Summary

Since summer is coming, let's take a look at how to make cold drinks at home.

இதையும் படிக்க..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.