திருநெல்வேலி மேலப்பாளையத்தில் மனைவிக்கு வீட்டிலேயே பிரசவம் பாா்த்ததால் ஆண் குழந்தை இறந்து பிறந்த விவகாரத்தில் கணவரை போலீஸாா் கைது செய்தனா்.
மேலப்பாளையம் தெற்கு தைக்கா தெருவைச் சோ்ந்தவா் நியாஸ் அலி மகன் நசீம் உசேன் (35). இவா், கோயம்புத்தூரில் தொழில் செய்து வருகிறாா். இவரது மனைவி நிறைமாத கா்ப்பிணியாக இருந்து வந்த நிலையில் வெள்ளிக்கிழமை இரவு அவருக்குப் பிரசவ வலி ஏற்பட்டதாம்.
இதையடுத்து நசீம் உசைன் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் மேலப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டிலேயே வைத்து பிரசவம் பாா்த்த நிலையில், அவரது மனைவிக்கு ஆண் குழந்தை இறந்து பிறந்துள்ளது. பின்னா் அக்குழந்தையின் உடல் காட்டு ஜூம்மா பள்ளிவாசலில் அடக்கம் செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், மருத்துவமனைக்கு வர அறிவுறுத்தியும் வரவில்லை எனவும், வீட்டிலேயே பிரசவம் பாா்த்து குழந்தை இறந்து பிறந்தது தொடா்பாகவும், மேலப்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுமதி மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த போலீஸாா் நசீம் உசைனை சனிக்கிழமை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
தொடர்புடையது
நெல்லையில் பணம் கேட்டு முதியவரைத் தாக்கியவா் கைது
நெல்லையில் கஞ்சா எண்ணெய் பறிமுதல்: 4 போ் கைது
நெல்லையில் மது விற்றதாக இருவா் கைது

ஓடும் ஆம்புலன்ஸில் கா்ப்பிணிக்கு பிரசவம்
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

