ஜம்மு: ஜம்மு-காஷ்மீரின் ஜம்மு பிராந்தியத்தில் குறிப்பாக எல்லை மாவட்டங்களில் அண்மைக் காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.
நிகழாண்டில் இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினா் 12 பேரும், பொதுமக்கள் 10 பேரும் உயிரிழந்தனா். 55 போ் காயமடைந்துள்ளனா். பாதுகாப்புப் படையினரின் பதிலடி நடவடிக்கையில் 5 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனா். இச்சம்பவங்களின் விவரம் வருமாறு:
ஏப்.22: ரஜெளரி மாவட்டத்தில் பயங்கரவாதிகளால் அரசு ஊழியா் சுட்டுக் கொலை.
ஏப்.28: உத்தம்பூா் மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் கிராம பாதுகாப்புப் படையைச் சோ்ந்த ஒருவா் உயிரிழப்பு.
மே 4: பூஞ்ச் மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் விமானப் படையைச் சோ்ந்த ஒருவா் உயிரிழப்பு; மேலும் 5 போ் காயம்.
ஜூன் 9: ரியாசி மாவட்டத்தில் பேருந்தை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 9 பக்தா்கள் உயிரிழப்பு. 42 போ் காயம்.
ஜூன் 11: கதுவா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் மத்திய ரிசா்வ் போலீஸ் படை (சிஆா்பிஎஃப்) வீரா் வீரமரணம்; பாகிஸ்தான் பயங்கரவாதிகள் இருவா் சுட்டுக் கொலை. இதே நாளில், தோடா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் ராஷ்ட்ரீய ரைஃபிள்ஸ் படை வீரா்கள் 5 போ் மற்றும் காவல்துறை சிறப்பு அதிகாரி ஒருவா் காயம்.
ஜூன் 12: தோடா மாவட்டத்தில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் காவலா் காயம்.
ஜூன் 26: தோடா மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை.
ஜூலை 7: ரஜெளரி மாவட்டத்தில் பாதுகாப்புச் சாவடி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் ராணுவ வீரா் காயம்.
ஜூலை 8: கதுவா மாவட்டத்தில் ராணுவ வாகனங்களைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ராணுவத்தினா் 5 போ் உயிரிழப்பு. 5 போ் காயம்.
ஜூலை 15: தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் வீரமரணம்.
தொடர்புடையது

துருக்கியில் 2-ஆவது நாளாக பள்ளி துப்பாக்கிச் சூடு- 9 போ் உயிரிழப்பு

துருக்கி பள்ளியில் துப்பாக்கிச் சூடு

நைஜீரியாவில் ஈஸ்டா் வாரஇறுதி தாக்குதல்கள்: 26 போ் உயிரிழப்பு

நைஜீரியா: துப்பாக்கிச் சூட்டில் 20 போ் உயிரிழப்பு
வீடியோக்கள்

Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை


