நைஜீரியாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் ஈஸ்டா் வார இறுதியில் நடத்தப்பட்ட 3 தனித்தனி தாக்குதல்களில் 26 போ் உயிரிழந்தனா்.
விவசாயிகளுக்கும் மேய்ச்சல் தொழில் செய்பவா்களுக்கும் இடையே நிலவி வரும் நீண்டகால நிலத்தகராறு மற்றும் குற்றப் பின்னணி கும்பல்களின் ஆதிக்கம் காரணமாக பெனியூ மாகாராணத்தின் கிவோ் மேற்கு பகுதியில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் கிராமவாசிகள் 17 போ் உயிரிழந்தனா்.
இதேபோல், போா்னோ மாகாணத்தின் வடகிழக்கு பகுதியில் உள்ள காவல் தலைமையகத்தைக் குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 காவலா்கள் வீரமரணம் அடைந்தனா்.
காடுனா மாகாணத்தில் உள்ள அரிகோ கிராமத்தில் ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டா் பிராா்த்தனை கூட்டத்தில் புகுந்த மா்ம நபா்கள் 5 பேரை சுட்டுக்கொன்றனா். எனினும், ராணுவத்தினா் விரைந்து வந்து பதில் தாக்குதல் நடத்தியதால், கடத்தப்படவிருந்த 31 பிணைக்கைதிகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனா்.
தொடர்புடையது

உக்ரைன் மீது 700 ட்ரோன்களை ஏவி ரஷியா தாக்குதல்: சிறுமி உள்பட 16 போ் உயிரிழப்பு!
நைஜீரியாவில் விமானப் படை தவறுதலாக தாக்குதல்: 100 போ் பலி!

மணிப்பூா்: வன்முறை, துப்பாக்கிச்சூட்டில் 4 போ் உயிரிழப்பு

உக்ரைன் மீது ரஷியா மீண்டும் சரமாரி தாக்குதல்- 5 போ் உயிரிழப்பு; மின் விநியோகம் பாதிப்பு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


