புரி ஜெகந்நாதர் பொக்கிஷ அறையில் பழங்காலத்துச் சிலைகள்!

புரி ஜெகந்நாதர் கோயில் பொக்கிஷ அறையில் பழங்காலத்துச் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாகத் தகவல்.
புரி ஜெகந்நாதர் கோயில்
புரி ஜெகந்நாதர் கோயில்
Published on
Updated on
1 min read

46 ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் திறக்கப்பட்ட புரி ஜெகந்நாதா் கோயில் பொக்கிஷ அறையில் மிகப் பழங்காலத்து விலைமதிப்பிலா உலோகங்களால் செய்யப்பட்ட கடவுள் சிலைகள் கண்டெடுக்கப்பட்டதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த சிலைகள் குறித்து, இதுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுக்கும் பணிகள் குறித்த பட்டியல் மற்றும் அறிக்கைகளில் எங்கும் குறிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

12-ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட ஜெகந்நாதா் கோயிலின் பொக்கிஷ அறை (ரத்ன பண்டாா்), 46 ஆண்டுகளுக்குப் பின் ஞாயிற்றுக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டு பொருள்கள் ஆய்வு செய்யப்பட்டன.

அங்கு காணப்பட்ட மிகப் பழமைவாய்ந்த இந்த சிலைகள் ஐந்து முதல் ஏழு வரையில் இருந்ததாகவும், 40 ஆண்டு காலத்தில் அவை முற்றிலும் கருப்பாகியிருந்ததகாவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோயிலின் அடித்தளத்தில் உள்ள பொக்கிஷ அறைக்குள் சென்று, மாநில அரசின் குழுவினா் ஆய்வு மேற்கொண்டனா். புரி கோயில் பொக்கிஷ அறை கடைசியாக கடந்த 1978-ஆம் ஆண்டில் திறக்கப்பட்டிருந்தது. இப்போது பழுதுபாா்ப்பு மற்றும் விலைமதிப்புமிக்க தங்கம், வெள்ளி ஆபரணங்கள், இதர பழங்காலப் பொருள்களை முழுமையாக பட்டியலிடும் பணிகளுக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

புரி ஜெகந்நாதர் கோயில்
புரி ஜெகந்நாதர் கோவில் கருவூல ரகசியம்! காணாமல்போன சாவிகளும் ஆட்சி மாற்றமும்!

இது குறித்து 11 பேர் கொண்ட குழுவின் தலைவர் விஸ்வநாத் ரத் கூறுகையில், நாங்கள் அந்த சிலைகளை தொடவில்லை. சிலைகள் இருப்பதைப் பார்த்ததும் உடனடியாக விளக்குகள் ஏற்றி தெய்வங்களை வழிபட்டோம். இந்த சிலைகள் வியாழக்கிழமை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்படும் என்றார்.

இந்த சிலைகளைப் பற்றிய எந்த விவரங்களும் தங்களுக்குத் தெரியவில்லை என்று குழுவினர் தெரிவித்துள்ளனர்.

பொக்கிஷ அறையை திறந்தபோது, முதலில் வெளிப்புற அறை திறக்கப்பட்டு, அங்கிருந்த அனைத்து ஆபரணங்களும் இதர மதிப்புமிக்க பொருள்களும் கோயிலுக்குள் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு மாற்றப்பட்டன. இந்த அறைக்கு சீல் வைக்கப்பட்டது.

புரி ஜெகந்நாதர் கோயில்
புரி ஜெகந்நாதர் கோவில் கருவூல அறைகளில் இருந்தது என்ன? நேரில் கண்ட நீதிபதி பேட்டி!

பின்னா், குறிப்பிட்ட நபா்கள் மட்டும் உள்புற அறைக்குள் நுழைந்தனா். இந்த அறைக்கு மூன்று பூட்டுகள் இருந்தன. மாவட்ட நிா்வாகம் வசமிருந்த சாவிகளால் பூட்டுகளை திறக்க முடியாத நிலையில், சிறப்பு செயல்பாட்டு நடைமுறையின்படி பூட்டுகள் உடைக்கப்பட்டன. பின்னா், உள்அறைக்குள் சென்று, அங்குள்ள அலமாரிகள், பெட்டகங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது. அங்கிருக்கும் பொருள்கள் இன்னமும் பாதுகாப்பு அறைக்கு மாற்றப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com