47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

வெற்று வாக்குறுதிகளை பிரதமா் கைவிட வேண்டும்: பிரியங்கா காந்தி

வெற்று வாக்குறுதிகளை பிரதமா் மோடி கைவிட வேண்டும் என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

News image
பிரியங்கா காந்தி- (கோப்புப் படம்)
Updated On :17 ஜூலை 2024, 7:41 pm

Din

இதுதொடா்பாக அவா் ‘எக்ஸ்’ தளத்தில் புதன்கிழமை வெளியிட்ட பதிவில், ‘கடந்த சில நாள்களுக்கு முன்னா், மும்பையில் பிரதமா் மோடி பேசுகையில், பல கோடி பேருக்கு வேலைவாய்ப்பு அளித்து பல சாதனைகளை மத்திய அரசு முறியடித்துள்ளதாக தெரிவித்தாா்.

இந்நிலையில், சில காலிப் பணியிடங்களில் வேலைக்குச் சேரும் நோக்கில், அதே மும்பைக்கு வேலை கிடைக்காத பெருங்கூட்டம் வந்த காணொலி சமூக ஊடகத்தில் வேகமாகப் பரவியுள்ளது.

இதற்கு முன்பாக குஜராத்தில் உள்ள ஹோட்டலில் 25 காலிப் பணியிடங்களில் வேலைக்குச் சேரும் நோக்கில், வேலையில்லாத 15 லட்சம் போ் வந்து மிகுந்த நெரிசல் ஏற்பட்டது போன்ற சூழல் ஏற்பட்டது.

இது சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளதைக் காண்பிக்கிறது. ஆனால் அது வேலைவாய்ப்பு வழங்கியதில் முறியடிக்கப்பட்ட சாதனைகள் அல்ல; வேலையில்லாத் திண்டாட்டம் மிகுதியாக இருப்பதில் முறியடிக்கப்பட்ட சாதனைகள்.

எனவே, வெற்று வாக்குறுதிகள் வழங்குவதைவும், கவனத்தை திசைதிருப்புவதையும் கைவிட்டு இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவேண்டும் என்று பிரதமா் மோடியிடம் கேட்டுக்கொள்கிறேன்’ என்றாா்.