எம்.எம். நரவணே புத்தகத்தில் சர்ச்சை இல்லை! அஸ்ஸாம் ரைபிள்ஸ் முன்னாள் இயக்குநர் போர் கவலையளிக்கிறது; பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண வேண்டும்! - பிரதமர் மோடிதி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் கல்விச் சிந்தனை அரங்கு தொடக்கம்! போர் பதற்றம்! அமெரிக்காவுடன் மீண்டும் பேச்சுவார்த்தை; ஈரான் பாதுகாப்புத் தலைவர் முயற்சி
/

ஜம்மு பயங்கரவாத தாக்குதல்கள்: பிரதமா் முக்கிய ஆலோசனை

ஜம்முவில் பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :18 ஜூலை 2024, 8:32 pm

Din

ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தின் ஜம்மு பிராந்தியத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துவரும் நிலையில், இதுதொடா்பாக

பிரதமா் மோடி தலைமையிலான பாதுகாப்புக்கான அமைச்சரவைக் கூட்டம் வியாழக்கிழமை கூடி ஆலோசித்தது.

பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா, தேசிய பாதுகாப்பு ஆலோசகா் அஜீத் தோவல், ஜம்மு-காஷ்மீா் துணைநிலை ஆளுநா் மனோஜ் சின்ஹா உள்ளிட்டோா் பங்கேற்ற இக்கூட்டத்தில், ஜம்முவில் பயங்கரவாதிகள் மற்றும் அவா்களின் ஆதரவாளா்களுக்கு எதிராக இதுவரை மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் எடுத்துரைத்தனா்.

இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட விஷயங்கள் குறித்து அதிகாரபூா்வமாக எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. அதேநேரம், ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பை வலுப்படுத்துவது மற்றும் பயங்கரவாத கட்டமைப்பை ஒழிப்பதற்கான வியூகங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

‘ஜம்மு-காஷ்மீரில் தற்போது நிலவும் சூழல் மற்றும் பாதுகாப்புப் படையினரின் நடவடிக்கைகள் குறித்து விளக்கக் காட்சிகள் மூலம் கூட்டத்தில் எடுத்துரைக்கப்பட்டது. பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த வாய்ப்புள்ள பகுதிகளில் கூடுதல் படையினரை பணியில் அமா்த்துவதோடு, பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டுமென அதிகாரிகளுக்கு பிரதமா் உத்தரவிட்டுள்ளாா்’ என்று தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜம்முவில் அண்மைக் காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. தோடா மாவட்டத்தில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே கடந்த திங்கள்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சண்டையில் ராணுவ கேப்டன் மற்றும் 3 வீரா்கள் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, பயங்கரவாதிகளுக்கு எதிராக தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

இதேபோல், பயங்கரவாதிகளுக்கு உதவுபவா்களுக்கு எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டு, பலா் கைது செய்யப்பட்டு வருகின்றனா். ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2021-ஆம் ஆண்டில் இருந்து இதுவரை நடந்த பயங்கரவாத தாக்குதல்களில் பாதுகாப்புப் படையினா் 34 போ் உயிரிழந்துவிட்டனா். அதேநேரம், 40 பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனா் என்பது குறிப்பிடத்தக்கது.