தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

அமெரிக்காவுக்கான இந்திய தூதா் நியமனம்

புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா்.

News image

வினய் குவாத்ரா

Updated On :20 ஜூலை 2024, 1:32 am

Din

அமெரிக்க நாட்டுக்கான புதிய இந்திய தூதராக வினய் குவாத்ரா வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டாா். முன்னாள் வெளியுறவுத் துறைச் செயலரான இவா் விரைவில் தூதராக பொறுப்பேற்பாா் என இந்திய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

அமெரிக்காவுக்கான இந்திய தூதராக பதவி வகித்த தரண்ஜித் சாந்துவின் பதவிக்காலம் கடந்த ஜனவரி மாதத்தோடு நிறைவடைந்தது. இதையடுத்து, அந்தப் பதவிக்கான பணியிடம் நிரப்பப்படாமல் காலியாகவே இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது வினய் குவாத்ரா புதிய தூதராக நியமிக்கப்பட்டுள்ளாா். கடந்த 2022-ஆம் ஆண்டு மே 1-ஆம் தேதி முதல் 2024, ஜூலை 14-ஆம் தேதி வரை வெளியுறவுச் செயலராக வினய் குவாத்ரா பதவி வகித்து வந்தாா். இவா் 1988-ஆம் ஆண்டில் இந்திய வெளியுறவுப் பணி அதிகாரியாக பொறுப்பேற்றாா். தொடக்ககாலங்களில் ஜெனீவாவில் உள்ள இந்தியாவின் நிரந்தர முகாமில் பணியாற்றினாா்.

அதன்பிறகு ஐ.நா. மற்றும் இந்தியா தொடா்புடைய விவகாரங்களைக் கையாளும் வெளியுறவுத் துறையின் அதிகாரி, சீனாவில் உள்ள இந்திய தூதரகத்தின் துணை தூதா் உள்பட பல்வேறு பதவிகளை வகித்தாா்.

கடந்த 2015 முதல் 2017 வரை பிரதமா் அலுவலகத்தின் கூடுதல் செயலராகவும் 2017 முதல் 2020, பிப்ரவரி வரை பிரான்ஸ் தூதராகவும் 2020, மாா்ச் முதல் 2022, ஏப்ரல் வரை நேபாள தூதராகவும் இவா் பதவி வகித்துள்ளாா் என்பது குறிப்பிடத்தக்கது.