
கர்நாடகத்தில் 25 விரல்களுடன் பிறந்த குழந்தை அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டத்தில் உள்ள ரப்கவி பேன்ஹாட்டி நகரைச் சேர்ந்தவர் பாரதி (35). கர்ப்பிணியான இவர் அண்மையில் பிரசவத்திற்காக தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. ஆனால் அந்த குழந்தைக்கு 25 விரல்கள் இருந்ததைக் கண்டு மருத்துவர் உள்பட அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்தனர்.
அதாவது இரு கால்களிலும் தலா 6 விரல்களும் மேலும் வலது கையில் 6 விரல்களும், இடது கையில் 7 விரல்களும் என மொத்தம் 25 விரல்களுடன் அந்த குழந்தை பிறந்துள்ளது.
இதுகுறித்த மகப்பேறு மருத்துவர் பார்வதி ஹிரேமத் கூறியதாவது, குரோமோசோம்களின் ஏற்றத்தாழ்வு காரணமாக இதுபோன்ற அரிதான குழந்தை பிறந்திருக்கிலாம்.
இருப்பினும் அந்த ஆண் நலமாக இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக ராஜஸ்தானில் கடந்த 2023ஆம் ஆண்டு இதேபோன்று பெண் குழந்தை ஒன்று 26 விரல்களுடன் பிறந்தது.
பாலிடாக்டிலி(Polydactyly) என்பது குழந்தை ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட கூடுதல் விரல்களுடன் பிறக்கும் ஒரு நிலை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.