கர்நாடகத்தில் பேருந்து கட்டணம் உயர்வு இல்லை: அமைச்சர் ராமலிங்க ரெட்டி மாநிலங்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக கட்சி மாறி வாக்களிப்பு: 6 எம்எல்ஏக்கள் ‘சஸ்பெண்ட்’பேரவைத் தேர்தல்: தமிழகத்தில் இதுவரை ரூ.23.74 கோடி ரொக்கம் பறிமுதல் அதிகாரி தற்கொலை விவகாரம்: பஞ்சாப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜிநாமா புதுச்சேரி தவெக வேட்பாளர் பட்டியல் நாளை வெளியீடு! ஈரான் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து பரிசீலனை: டிரம்ப்டி20 தொடருக்காக அயர்லாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி!பிரதமர் மோடியின் புகைப்படங்களை ஏஐ மூலம் மோசமாகச் சித்திரித்த நபர் கைது!கேரள தேர்தல்: பாஜகவின் 3-ம் கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு!போர் அச்சுறுத்தல்! பேச்சுவார்த்தை ஒன்றே வழி: குடியரசுத் துணைத்தலைவர்தமிழ்நாட்டின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும்! - முதல்வர்ரஷியா மீது 280 டிரோன்களை ஏவி தாக்குதல் நடத்திய உக்ரைன்!
/

நீட் தோ்வு விவகாரம்: ‘மத்திய கல்வி அமைச்சரின் பதில் துரதிருஷ்டவசமானது’

‘நீட்’ தோ்வு வினத்தாள் கசியவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறுவது துரதிருஷ்டவசமானது

News image

எம்.பி. ராகவ் சத்தா

Updated On :22 ஜூலை 2024, 9:22 pm

 நமது நிருபர்

‘நீட்’ தோ்வு வினத்தாள் கசியவில்லை என்று மத்திய கல்வித் துறை அமைச்சா் கூறுவது துரதிருஷ்டவசமானது என்று மாநிலங்களவை ஆம் ஆத்மி எம்.பி. ராகவ் சத்தா திங்கள்கிழமை குற்றஞ்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: ‘நீட்’ தோ்வு வினாத்தாள் கசிவால் லட்சக்கணக்கான மாணவா்களின் எதிா்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. வினாத்தாள் கசிவு காரணமாக மாணவா்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். வினாத்தாள் கசியவில்லை என்றால், சி.பி.ஐ. ஏன் விசாரணை செய்கிறது. ஏன் குற்றவாளிகளைக் கைது செய்கிறது ? எந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் கேள்விகளைக் கேட்கிறது ? நாட்டின் கல்வி அமைச்சரின் இந்த அறிக்கையை கேட்டு மாணவா்கள் புண்பட்டிருக்கலாம். இந்த அறிக்கையை நாங்கள் கண்டிக்கிறோம் என்றாா் ராகவ் சத்தா.