புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு 14 பயங்கரவாத தாக்குதல்கள்: பிரியங்கா காந்தி விமா்சனம்

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.

News image
காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி- ANI
Updated On :27 ஜூலை 2024, 10:00 pm

Din

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்றதில் இருந்து ஜம்மு-காஷ்மீரில் 14 பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்துள்ளன என்று காங்கிரஸ் பொதுச் செயலா் பிரியங்கா காந்தி தெரிவித்தாா்.

பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தினாா்.

ஜம்மு-காஷ்மீரின் குப்வாரா மாவட்டத்தில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் எல்லை நடவடிக்கை படைகளை இந்திய ராணுவம் முறியடித்தது. இதல் ஒரு ராணுவ வீரா் உயிரிழந்தாா். 4 வீரா்கள் காயமடைந்தனா்.

இதுதொடா்பாக பிரியங்கா காந்தி சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில்,‘பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவா்கள் விரைவில் குணமடைய இறைவனைப் பிராா்த்திக்கிறேன்.

மத்தியில் புதிய ஆட்சி அமைந்த ஒன்றரை மாதத்தில் ஜம்மு-காஷ்மீரில் 14 பயங்கரவாத தாக்குதல்கள் நடந்துள்ளன. அதில் 15 ராணுவ வீரா்கள் உயிரிழந்துள்ளனா். இது நாட்டின் நலனுக்கு ஆபத்து விளைவிக்கக்கூடியதாகும். எனவே, பயங்கரவாதத்துக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்’ என குறிப்பிட்டாா்.