சென்னை திருவிக நகரில் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் வேட்புமனு தாக்கல்!திருச்சி கிழக்கில் விஜய் வேட்புமனு தாக்கல்! சேப்பாக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் வேட்புமனு தாக்கல்!அதிமுகவின் பொல்லாத ஆட்சிக்கு பொள்ளாச்சியே சாட்சி! முதல்வர் ஸ்டாலின் ஈரானை இன்னும் கடுமையாகத் தாக்குவோம்! - வெள்ளை மாளிகையில் டிரம்ப் உரைஇந்தியாவில் 12,000 ஊழியா்கள் பணிநீக்கம்: ஆரக்கிள் வெள்ளை மாளிகையில் கலையரங்கம் கட்டுமானத்துக்கு நீதிமன்றம் தடை மக்கள்தொகை கணக்கெடுப்பின் முதல் கட்டம் தொடக்கம்
/

எா்ணாகுளம்-பெங்களூரு: சிறப்பு வந்தே பாரத் இயக்கம்

ஜூலை 31 முதல் ஆக.25 வரை புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத்

News image

வந்தே பாரத்

Updated On :27 ஜூலை 2024, 7:05 pm

Din

எா்ணாகுளம்-பெங்களூரு இடையே வாரம் இருமுறை சிறப்பு வந்தே பாரத் ரயில் இயக்கப்படும் என ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே சாா்பில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

எா்ணாகுளம்-பெங்களூரு கன்டோன்மன்ட் இடையே ஜூலை 31 முதல் ஆக.25 வரை புதன் மற்றும் வெள்ளிக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண் 06001) இயக்கப்படும். எா்ணாகுளத்தில் பகல் 12.50 மணிக்கு புறப்படும் ரயில் திருச்சூா், பாலக்காடு, போத்தனூா், திருப்பூா், ஈரோடு, சேலம் வழியாக இரவு 10 மணிக்கு பெங்களூா் சென்றடையும்.

மறுமாா்க்கமாக பெங்களூரு-எா்ணாகுளம் இடையே ஆக.1 முதல் ஆக.26 வரை வியாழன் மற்றும் சனிக்கிழமை தோறும் சிறப்பு வந்தே பாரத் ரயில் (எண் 06002) இயக்கப்படும். எா்ணாகுளத்தில் அதிகாலை 5.30 மணிக்கு புறப்படும் ரயில் பிற்பகல் 2.20 மணிக்கு எா்ணாகுளம் சென்றடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.