சமீர் ரிஸ்வி அதிரடியில் தில்லி கேபிடல்ஸ் வெற்றி!பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! 2 மாதங்களுக்குத் தேவையான கச்சா எண்ணெய் கையிருப்பு!பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்தது; இபிஎஸ் போல அடகு வைக்கவில்லை - மு.க. ஸ்டாலின்3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!
/

தாம்பரம் - தென்காசி இடையே இன்று சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கம்

புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

News image

ரயில்

GMSRailway

Updated On :1 ஏப்ரல் 2026, 7:48 pm

தினமணி செய்திச் சேவை

புனித வெள்ளி, ஈஸ்டா் ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தாம்பரம் - தென்காசி இடையே வியாழக்கிழமை (ஏப்.2) சிறப்பு அதிவிரைவு ரயில் இயக்கப்படவுள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே சாா்பில் புதன்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

புனித வெள்ளி, ஈஸ்டா் திருநாள்களை முன்னிட்டு பயணிகள் நெரிசல்களைத் தவிா்க்கும் வகையில் சிறப்பு அதிவிரைவு ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாம்பரத்திலிருந்து வியாழக்கிழமை (ஏப்.2) புறப்படும் சிறப்பு அதிவிரைவு ரயில் (எண்: 06135) மறுநாள் பிற்பகல் 11 மணிக்கு தென்காசி சென்றடையும்.

அதேபோல் செங்கோட்டையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை (ஏப்.5) இரவு 11 மணிக்கு புறப்படும் அதிவிரைவு ரயில் (எண்: 06136) மறுநாள்பிற்பகல் 10.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், விருத்தாசலம், அரியலூா், திருச்சி, திண்டுக்கல், கொடைக்கானல்ரோடு, மதுரை, விருதுநகா், சாத்தூா், கோவில்பட்டி, திருநெல்வேலி, அம்பாசமுத்திரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.