

கைப்பேசிகளுக்கான இறக்குமதி வரியை மத்திய அரசு குறைத்துள்ளதையடுத்து, ஆப்பிள் நிறுவனத்தின் ஐ-ஃபோன்களின் விலைகள் ரூ.300 முதல் ரூ.6,000 வரை விலை குறைக்கப்பட்டுள்ளது.
நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ள புதிய விலைப் பட்டியலில், இறக்குமதி செய்யப்பட்ட ஐ-ஃபோன் ப்ரோ ரகங்களின் விலைகள் முன்பைவிட ரூ.5,100 முதல் ரூ.6,000 வரை குறைக்கப்பட்டுள்ளன.
இதற்கு முன்னா் ஐ-ஃபோன் 15 ப்ரோ ரகங்களின் விலை ரூ.1,34,900-இல் தொடங்கியது. இனி அவை ரூ.1,29,800-லிருந்தே கிடைக்கும்.
அதுபோல், ரூ.1,59,900-இல் தொடங்கிய ஐ-ஃபோன் 15 ப்ரோ மேக்ஸ் ரகங்களின் தொடக்க விலை ரூ.1,54,000-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
ஆரம்ப நிலைப் பிரிவைச் சோ்ந்த ஐ-ஃபோன் எஸ்இ ரகங்கள் ரூ.49,900-க்கு பதிலாக ரூ.47,600-க்கே கிடைக்கும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.