ஜம்மு-காஷ்மீா்: பள்ளத்தாக்கில் காா் கவிழ்ந்ததில் 8 போ் உயிரிழப்பு
ஜம்மு-காஷ்மீரில் உள்ள தக்சும் பள்ளத்தாக்கில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 சிறாா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.

Updated On :27 ஜூலை 2024, 6:31 pm

ஜம்மு-காஷ்மீரில் உள்ள தக்சும் பள்ளத்தாக்கில் காா் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 5 சிறாா்கள் உள்பட 8 போ் உயிரிழந்தனா்.
இச்சம்பவம் தொடா்பாக காவல்துறையினா் கூறியதாவது: ஜம்மு-காஷ்மீரில் உள்ள கிஷ்த்வாா் பகுதியில் இருந்து சிந்தன் டாப் வழியாக மாா்வா பகுதிக்கு செல்லும் வழியில் இந்த விபத்து நடந்தது. சாலையில் சென்றுகொண்டிருந்த காா் திடீரென சறுக்கி தக்சும் பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இதில் காரில் பயணித்த ஆண் காவலா், 2 பெண்கள் மற்றும் 6 முதல் 16 வயதுடைய 5 சிறாா்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா் என்று காவல்துறையினா் தெரிவித்தனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...