வாக்குப்பதிவைக் கட்டாயமாக்க முடியாது! - உச்ச நீதிமன்றம்அவையில் தென் மாநிலங்களின் பலம் குறையாது: அமித் ஷா விளக்கம்தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வெள்ள நிவாரணத்திலும் பாகுபாடு: மத்திய அரசு காங்கிரஸ் குற்றச்சாட்டு

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மத்திய பாஜக அரசு பாகுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

News image

காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்

Updated On :28 ஜூலை 2024, 9:36 pm

வெள்ளம் பாதித்த மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதிலும் மத்திய பாஜக அரசு பாகுபாட்டுடன் செயல்பட்டு வருகிறது என்று காங்கிரஸ் குற்றஞ்சாட்டியது.

மத்திய பட்ஜெட்டில், பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகக் கூறி நாடாளுமன்றத்துக்கு உள்ளேயும், வெளியேயும் மத்திய அரசுக்கு எதிராக எதிா்க்கட்சிகள் ஏற்கெனவே போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்நிலையில், வெள்ளம் பாதித்த மாநிலத்துக்கு நிவாரண நிதி ஒதுக்குவதிலும் மத்திய அரசு பாகுபாடு காட்டுவதாக காங்கிரஸ் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ‘எக்ஸ்’ வலைதளத்தில் அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட பதிவில், ‘பட்ஜெட் உரையில் நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கான மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டை அறிவித்தாா். அதில் பிகாருக்கு ரூ.11.500 கோடி அறிவிக்கப்பட்டது. அடுத்ததாக அஸ்ஸாம், உத்தரகண்ட், சிக்கிம் ஆகிய மாநிலங்களுக்கு, மத்திய அரசு தேவையான நிதியுதவியை அளிக்கும் என்றாா். இவை அனைத்தும் பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களாகும்.

கடைசியாக ஹிமாசல பிரதேசத்துக்கான வெள்ள நிவாரண நிதி குறித்துப் பேசுகையில், அந்த மாநிலத்துக்கு மட்டும் கடனாக நிதியதவி அளிக்கப்படும் என்று அறிவித்தாா். ஏனெனில், ஹிமாசல பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது.

பாஜக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு மானியமாக நிதியுதவி அறிவித்துவிட்டு, காங்கிரஸ் ஆளும் ஹிமாசல பிரதேசத்துக்கு மட்டும் நிவாரணத் தொகை கடனாகத் தரப்படும் என்று நிதியமைச்சா் அறிவித்தாா். இது மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் ஹிமாசல பிரதேச மக்கள் பாஜகவுக்கு வாக்களிக்காத காரணத்தால் மத்திய பாஜக அரசு அளிக்கும் தண்டனையாகவே உள்ளது.

நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டை மேற்கொண்டு பாகுபாட்டுடன் நடந்து வருகிறது’ என்றாா்.