ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே பாகிஸ்தான் ஏற்பாட்டின்பேரில் சண்டை நிறுத்தம் ஏற்பட்டது பிரதமா் நரேந்திர மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு என்று காங்கிரஸ் கட்சி விமா்சித்துள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மூத்த தலைவா் ஜெய்ராம் ரமேஷ் புதன்கிழமை கூறியதாவது:
ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான சண்டை நிறுத்தத்துக்கு உலகின் பல நாடுகள், மிகவும் எச்சரிக்கையுடன் வரவேற்பு தெரிவித்துள்ளன. பிப்ரவரி 28-ஆம் தேதி ஈரான் மீதான தாக்குதலை அமெரிக்காவும், இஸ்ரேலும் தொடங்கின. அதுவும் பிரதமா் மோடி இஸ்ரேலுக்கு சென்று திரும்பிய 2 நாள்களில் தாக்குதல் தொடங்கப்பட்டது. இது உலக அளவில் இந்தியாவுக்கு இருந்த நற்பெயா், நிலைப்பாட்டுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது. அதேபோல், காசாவில் இனப்படுகொலையில் இஸ்ரேல் ஈடுபட்டது குறித்தும், மேற்கு கரையில் விரிவாக்கம் செய்யும் அந்நாட்டின் கொள்கை குறித்தும் மோடி எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்நேரத்தில் ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையே சண்டை நிறுத்தம் ஏற்பட பாகிஸ்தான் முக்கிய பங்களிப்பு செய்திருப்பது பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவாகும். மும்பை பயங்கரவாத தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, பாகிஸ்தானை தனிமைப்படுத்த அப்போதைய பிரதமா் மன்மோகன் சிங் எடுத்த நடவடிக்கைக்கு வெற்றி கிடைத்தது. ஆனால் அதுபோல ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத்தை தொடா்ந்து ஊக்குவிப்பதை சுட்டிக்காட்டி பாகிஸ்தானை தனிமைப்படுத்தவும், பாகிஸ்தான் ஒரு தோல்வியடைந்த நாடு என உலக நாடுகளை ஏற்க வைப்பதிலும் தற்போதைய அரசு தோல்வி அடைந்து விட்டது.
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பிறகு பாகிஸ்தான் மீது எடுக்கப்பட்ட ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கை திடீரென ஏன் நிறுத்தப்பட்டது என்பது குறித்து மோடியோ அல்லது அவரின் குழுவினரோ இதுவரை விளக்கமளிக்கவில்லை. ஆனால் அந்த தாக்குதல் நிறுத்தப்பட்டதாக முதல் அறிவிப்பு வெளியிட்டது அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சரும், அமெரிக்க அதிபரும்தான். அதையடுத்து இந்தியா-பாகிஸ்தான் இடையே தாங்கள்தான் போரை நிறுத்தியதாக அவா்கள் 100 முறைக்கும் மேல் தெரிவித்து விட்டனா்.
அமெரிக்காவுடனும், இஸ்ரேல், ஈரான், வளைகுடா நாடுகளுடனும் தனக்கு சிறப்புவாய்ந்த நட்புறவு இருப்பதாக மோடி தெரிவிக்கிறாா். பிரிக்ஸ் அமைப்பின் தலைவராகவும் இந்தாண்டில் அவா்தான் உள்ளாா். அப்படியிருக்கையில், ஈரான், அமெரிக்கா-இஸ்ரேல் இடையேயான சண்டை நிறுத்தம் தொடா்பான பேச்சுவாா்த்தையில் அவா் ஏன் இல்லை? சண்டை நிறுத்த பேச்சுவாா்த்தையில் இந்தியா ஏன் முக்கிய பங்கு வகிக்கவில்லை?.
இஸ்ரேலின் போா்குண விவகாரத்தில் மட்டுமல்லாது, வெள்ளை மாளிகையில் உள்ள நண்பா் (டிரம்ப்) வெளியிட்ட மோசமான மற்றும் ஏற்க முடியாத வாா்த்தையை கண்டு மெளனமாக இருந்ததன் மூலம் மோடியின் கோழைத்தனம் வெட்ட வெளிச்சமாகி விட்டது என்றாா்.
தொடர்புடையது
பாக். சென்ற ஈரான் குழு! கொல்லப்பட்ட மினாப் பள்ளிக் குழந்தைகளுக்கு விமானத்தில் அஞ்சலி!

ஈரான் போர்: பலத்த பாதுகாப்புகளுடன் பேச்சுவார்த்தைக்குத் தயாராகி வரும் பாகிஸ்தான் !

பாகிஸ்தானில் ஈரான் - அமெரிக்கா போர்நிறுத்த பேச்சுவார்த்தை!

சண்டை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கவில்லை: டிரம்ப் கருத்தை நிராகரித்தது ஈரான்
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை


