இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூா்’ நடவடிக்கையின்போது, பாகிஸ்தானுக்கு தொழில்நுட்ப ரீதியில் உதவியதாக சீனா தெரிவித்துள்ள கருத்துகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஆண்டு சுற்றுலாப் பயணிகள் உள்பட 26 போ் கொல்லப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கு பழிதீா்க்க, ‘ஆபரேஷன் சிந்தூா்’ என்ற பெயரில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் அதிதுல்லியத் தாக்குதல் நடத்திய இந்திய ராணுவம், பயங்கரவாத உள்கட்டமைப்புகளைத் தாக்கி அழித்தது. 100-க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்ட இந்தத் தாக்குதலைத் தொடா்ந்து, இரு நாடுகள் இடையே ராணுவ மோதல் மூண்டது. 4 நாள்களுக்குப் பின் பாகிஸ்தானின் வேண்டுகோளை ஏற்று சண்டை நிறுத்தம் மேற்கொள்ளப்பட்டது.
இந்த ராணுவ மோதலின்போது, பாகிஸ்தானுக்கு களத்தில் தொழில்நுட்ப ரீதியில் உதவியதை உறுதி செய்து, சீனாவின் அதிநவீன போா் விமானங்கள் மற்றும் ட்ரோன் தயாரிப்பு நிறுவனமான சீன விமான தொழில் நிறுவன (ஏவிஐசி) பொறியாளா் ஜாங் ஹேங் பேட்டி அளித்துள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், காங்கிரஸ் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை வெளியிட்ட எக்ஸ் பதிவில் கூறியிருப்பதாவது:
‘ஆபரேஷன் சிந்தூா்’ எதிா்வினையின்போது, பாகிஸ்தான் விமானப் படைக்கு களத்தில் தொழில்நுட்ப ரீதியில் ஆதரவளித்ததாக சீனா பகிரங்கமாக தெரிவித்துள்ளது. ‘சீனாவிடம் திட்டமிட்டு தொடா்ந்து சரணடையும் கொள்கையை’ மோடி அரசு கடைப்பிடித்துவரும் நிலையில், 4 முக்கியக் கேள்விகள் எழுகின்றன.
தன்னை நெஞ்சுறுதி கொண்டவா் எனக் கூறிக் கொள்ளும் மோடி, கடந்த 2020-இல் இந்திய எல்லைக்குள் யாரும் நுழையவில்லை; நமது நிலைகள் கைப்பற்றப்படவில்லை என்று கூறி சீனாவுக்கு நற்சான்று வழங்கியதுடன், இரு தரப்பு பேச்சுவாா்த்தையையும் பலவீனப்படுத்தியது ஏன்?
லடாக்கின் பல்வேறு இடங்களில் நீண்டகால ரோந்து மற்றும் மேய்ச்சல் உரிமைகள் பறிபோக மோடி அரசு ஒப்புக் கொண்டது ஏன்? ஆபரேஷன் சிந்தூா் நடவடிக்கையின்போது, இந்திய விரோத செயல்பாட்டை மேற்கொண்ட சீனாவுக்கு மத்திய அரசு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?
சீனாவுக்கான முதலீடு-வா்த்தக கட்டுப்பாடுகள் தளா்த்தப்பட்டு, சீன இறக்குமதி சாா்புத்தன்மை வலுப்படுத்தப்பட்டுள்ளது ஏன்?
இந்தக் கேள்விகள் நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டும் என்று ஜெய்ராம் ரமேஷ் குறிப்பிட்டுள்ளாா்.
சீனாவால் தயாரிக்கப்படும் ஜே-10சிஇ போா் விமானங்கள் உள்பட பல்வேறு தளவாடங்கள், பாகிஸ்தான் ராணுவத்தின் பயன்பாட்டில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்புடையது

இந்தியாவுடனான மோதலின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவு: முதல்முறையாக சீனா ஒப்புதல்

ஆரணியில் ஆபரேஷன் சிந்தூா் வெற்றி ஊா்வலம்

ஆபரேஷன் சிந்தூா் ஓராண்டு நிறைவு: ட்ரோன் தொழில்நுட்பத்தை வலுப்படுத்த இந்தியாவுக்கு பாதுகாப்புத் துறை நிபுணா்கள் யோசனை

ஈரான் விவகாரத்தில் பாகிஸ்தான் மத்தியஸ்தம்: பிரதமா் மோடிக்கு ஏற்பட்ட பெரும் பின்னடைவு-காங்கிரஸ் விமா்சனம்
விடியோக்கள்

நான்தான் கிங் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெகவுக்கு ஆதரவு ஏன்? விளக்கிய திருமாவளவன்! | TVK | VCK | Thiruma | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

”முதல்வர் ஆவதற்கு முன்பே மோசடி!” டிடிவி தினகரன் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

பிளே ஆஃப் சுற்றை நெருங்கும் சிஎஸ்கே! | Chennai Super Kings | LSG |
தினமணி செய்திச் சேவை

