தவெக தலைமையிலான கூட்டணியின் பெயர் செப். 9-ல் அறிவிப்புதவெக நிர்வாகி கொலை: துணை ஆணையர், ஆய்வாளர் காத்திருப்புப் பட்டியலுக்கு மாற்றம்கட்டட விபத்து மீட்புப் பணி! நேரில் ஆய்வு செய்த முதல்வர் ரேகா குப்தா!3 நாள்கள் அரசுப் பயணமாக இலங்கை செல்லும் ராஜ்நாத் சிங்!சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே!

ஏழைகளுக்கு நலத்திட்ட வீடுகள் வழங்க ஆந்திர அரசு முடிவு!

ஆந்திரா மாநிலத்தில் 2029ஆம் ஆண்டுக்குள் அனைத்து விதத்தில் தகுதியான ஏழை மக்களுக்கும் நலத்திட்ட வீடுகள் வழங்க உறுதியாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

சித்தரிக்கப்பட்டது | கோப்புப் படம்

Published On :29 ஜூலை 2024, 10:36 pm IST

அமராவதி: ஆந்திரா மாநிலத்தில் 2029ஆம் ஆண்டுக்குள் அனைத்து விதத்தில் தகுதியான ஏழை மக்களுக்கும் நலத்திட்ட வீடுகள் வழங்க உறுதியாக இருப்பதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து வீட்டு வசதி அமைச்சர் கே பார்த்தசாரதி தெரிவித்ததாவது:

முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆந்திர மாநில வீட்டுவசதி கழகத்தை ஆய்வு செய்துள்ளதாக அமைச்சர் கே பார்த்தசாரதி தெரிவித்துள்ள நிலையில், இந்த ஆய்வில் சில முடிவுகளும் சில இலக்குகளும் நிர்ணயிக்கப்பட்டது.

இது குறித்து தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது, அடுத்த 100 நாட்களில் 1.25 லட்சம் வீடுகளையும், ஒரு ஆண்டுக்குள் 8.25 லட்சம் வீடுகளையும் கட்டி முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எஸ்ஆர் நகர் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள குகட்பல்லி வீட்டு வசதி வாரியத்தின் மூலம் நிறைவேற்றப்பட்ட திட்டங்களின்படி பத்திரிகையாளர்களுக்கும், நடுத்தர மற்றும் கீழ் நடுத்தர வர்க்கத்தினருக்கு வீடுகள் கட்டித்தர அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.