டேட்டிங் ஸ்கேம்.. இளைஞரிடம் ரூ.28 லட்சம் பறித்த கும்பல்! போலீஸ் சொல்லும் அறிவுரை

டேட்டிங் ஸ்கேம் மூலம் இளைஞரிடம் ரூ.28 லட்சம் பறித்த கும்பல் பற்றி போலீஸ் விளக்கம், ஏமாறாமல் இருக்க அறிவுரை
டேட்டிங் ஸ்கேம்
டேட்டிங் ஸ்கேம்
Published on
Updated on
1 min read

விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி, டேட்டிங் ஸ்கேம் எனப்படும் மோசடியில் சிக்கி ரூ.28 லட்சத்தை இழந்துள்ளார்.

போலியாக பெண்ணின் பெயரில் பேசி, திருமணமாகாத மெக்கானிக்கல் பொறியாளரான இளைஞரை மோசடி கும்பல் வலையில் வீழ்த்தி சிறுக சிறுக ரூ.28 லட்சத்தை ஏமாற்றியிருக்கிறது.

தெலங்கானாவிலிருந்து இந்த மோசடி கும்பல் செயல்பட்டுள்ளது. இளைஞரின் இரக்கக் குணத்தைப் பயன்படுத்தி, பல்வேறு காலக்கட்டங்களில் பல பொய்களைச் சொல்லி பணம் பறிக்கப்பட்டுள்ளது. இந்த மோசடி கும்பலைச் சேர்ந்த ஒரு நபரின் அடையாளம் காணப்பட்டுள்ளது. மற்றவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

டேட்டிங் ஸ்கேம்
வயநாடு நிலச்சரிவு, கனமழை எச்சரிக்கை: கேரள சுற்றுலா தளங்கள் மூடல்

இது குறித்து காவல்துறையினர் தெரிவிக்கையில், இது புதுவிதமான மோசடியாக உள்ளது. மோசடியாளர்கள் பெண்கள் பெயரில் போலியான முகவரியைத் தயாரித்து, டேட்டிப் இணையதளங்கள் மற்றும் செயலிகளில் நுழைகிறார்கள். இவர்கள் சில நாள்கள் அதில் செயல்பட்டு, தங்களுக்கு சரியான நபரை தேர்வு செய்து, அவர்களுடன் தொடர்ந்து பேசி நம்பிக்கையை ஏற்படுத்தி, தாங்கள் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் போல அவர்களை உணர்வுப்பூர்வமாக நம்ப வைக்கிறார்கள். தொடர்ந்து நேரில் சந்தித்து பேசுவது பழகுவது போன்றவற்றிலும் ஈடுபடுகிறார்கள். சிலர் தங்களுக்கு பணம் வேண்டும் என்று கேட்டு பணத்தை ஏமாற்றுகிறார்கள், சிலரை மிரட்டி, தங்களுடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை வெளியிட்டுவிடுவோம் என்று கூறி பணத்தைப் பறிக்கிறார்கள். இதுபோன்ற சில மோசடிச் சம்பவங்கள் குறித்து புகார்கள் வந்துள்ளன. எனவே, மக்கள்தான் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறையினர் எச்சரிப்பதாவது,

1. மோசடி செய்பவர்கள் உறவை ஏற்படுத்த அவசரப்படுவார்கள்.

2. முகவரியில் இருக்கும் புகைப்படத்தின் உண்மைத்தன்மையை அறிய பல தொழில்நுட்பங்கள் இருக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தவும்.

3. ஆன்லைனில் அறிமுகமான யாருக்கும், ஆன்லைன் மூலம் தெரிந்தவர் போல பழகி பணம் கேட்கும் யாருக்கும் பணம் அனுப்ப வேண்டாம்.

4. ஒருவேளை யார் மீது சந்தேகம் வந்தாலும் உடனடியாக அவர்களுடன் பேசுவதை நிறுத்திவிடுங்கள்.

5. இதுபோன்ற டேட்டிங் ஸ்கேம்கள் உள்ளிட்ட புதிய மோசடிகள் குறித்து அறிந்துகொண்டு எச்சரிக்கையாக இருங்கள் என அறிவுறுத்தியிருக்கிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com