இது ஆட்சியா? அலட்சியத்துக்கு முடிவே இல்லையா? மம்தா

ஹௌரா - மும்பை விரைவு ரயில் விபத்துக்கு மம்தா பானர்ஜி கண்டனம்.
Mamata
மம்தா பானர்ஜிDin
Published on
Updated on
1 min read

ஹௌரா - மும்பை விரைவு ரயில் விபத்துக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்துள்ளார்.

ஜார்க்கண்ட் அருகே இன்று அதிகாலை மும்பை நோக்கி சென்று கொண்டிருந்த விரைவு ரயில் தடம் புரண்டதில் 2 பயணிகள் உயிரிழந்தனர். மேலும் 20 பேர் காயமடைந்துள்ளனர்.

Mamata
மும்பை விரைவு ரயில் தடம் புரண்டு விபத்து: 2 பேர் பலி; 20 பேர் காயம்!

இந்த விபத்து குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பதாவது:

“மற்றொரு பயங்கர ரயில் விபத்து. இன்று அதிகாலை ஜார்க்கண்டில் உள்ள சக்ரதர்பூர் பிரிவில் ஹவுரா-மும்பை ரயில் தடம் புரண்டதில் பலர் உயிரிழந்துள்ளனர், ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

இதுதான் ஆட்சியா? ஏறக்குறைய ஒவ்வொரு வாரமும் ரயில் விபத்துகளால் உயிரிழப்பும், காயமும் முடிவில்லா ஒன்றாக அரங்கேறி வருகின்றது. இதை எவ்வளவு காலம் பொறுத்துக் கொள்வோம்? மத்திய அரசின் அலட்சியத்திற்கு முடிவே இல்லையா?

உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும் உறவினர்களுக்கும் எனது இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்” எனப் பதிவிட்டுள்ளார்.

கடந்த சில வாரங்களாகவே அடிக்கடி ரயில் விபத்துகள் நடந்து வருவது பயணிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com