மகாராஷ்டிர காட்டிலிருந்து அமெரிக்க பெண் மீட்பு: முன்னாள் கணவர் மீது கொலை முயற்சி வழக்கு

மகாராஷ்டிர காட்டிலிருந்து அமெரிக்க பெண் மீட்கப்பட்ட சம்பவத்தில் முன்னாள் கணவர் மீது கொலை முயற்சி வழக்கு
அமெரிக்க பெண்
அமெரிக்க பெண்
Published on
Updated on
2 min read

மகாராஷ்டிரத்தில் காட்டுப்பகுதியிலிருந்து சங்கிலியால் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த 50 வயதுடைய அமெரிக்கப் பெண் மீட்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் கணவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் சிந்துதுர்கா மாவட்டத்தின் தென்பகுதியில் உள்ள காட்டில், சங்கிலியால் மரத்தில் கட்டிவைக்கப்பட்டிருந்த அமெரிக்க பெண் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

அவரிடம் நடத்திய முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில், அமெரிக்க பெண்ணை மரத்தில் சங்கிலியால் கட்டிவைத்துவிட்டுச் சென்ற அவரது முன்னாள் கணவர் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அப்பெண் அளித்த தகவலின் அடிப்படையில் தொடர்ந்து கணவர் மற்றும் குடும்பத்தினரை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

அமெரிக்க பெண்
வயநாடு நிலச்சரிவு, கனமழை எச்சரிக்கை: கேரள சுற்றுலா தளங்கள் மூடல்

அப்பெண் கூறிய தகவலில், தனது பெயர் லலிதர் கயி குமார் என்பதும், அமெரிக்காவைச் சேர்ந்த தான் தமிழகத்தில் வசித்து வந்தாகவும் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.

வனப்பகுதிக்குள் சென்று கால்நடைகளை மேய்த்து வருபவர், சனிக்கிழமை காலை, அப்பெண்ணின் கதறலைக் கேட்டு காவல்துறைக்குத் தகவல் தெரிவித்ததைத் தெர்டர்ந்து அவர் காப்பாற்றப்பட்டுள்ளார். அவர் காப்பாற்றப்படுவதற்கு சுமார் 48 மணி நேரத்துக்கு முன்பு மரத்தில் கட்டப்பட்டிருக்கலாம் என்று காவல்துறை தெரிவிக்கிறது.

அமெரிக்க பெண்ணிடம், அமெரிக்க பாஸ்போர்ட் மற்றும் தமிழக முகவரியில் ஆதார் அட்டையின் நகல்களும் இருந்துள்ளன. அதில், அவர் பெயர் லலிதா கயி என்று அச்சிடப்பட்டுள்ளது. அவர் பேசும் நிலையில் இல்லாததால், உடனடியாக அவர் கோவாவில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

அப்பெண்ணின் கைப்பையில் ஒரு காகிதம் இருந்ததாகவும், அதில் தனது முன்னாள் கணவர் என அவர் எழுதி வைத்திருப்பதும் காவல்துறையினர் கண்டறிந்துள்ளனர். நாங்கள் வனப்பகுதியிலிருந்து ஒரு பெண்ணை மீட்டுள்ளோம். அவரைப் பார்க்க அமெரிக்காவில் பிறந்தவர் போல இருக்கிறார், சிறிது காலம் அவர் கோவாவில் வசித்துள்ளார், அவரது முன்னாள் கணவர்தான் இங்கு வந்து அவரைக் கட்டிவிட்டுச் சென்றதாகவும் கூறியிருக்கிறார். அவர் தெரிவித்த வாக்குமூலத்தை எழுதி காவல்துறையினர் கையெழுத்தும் பெற்றுள்ளனர். அவர் தெரிவித்த தகவலின் அடிப்படையில், தமிழகத்தில் அவரது குடும்பத்தினர் யாராவது இருக்கிறார்களா என்ற கோணத்திலும் காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.

பல நாள்களாக சாப்பிடாமல், தண்ணீர் குடிக்காமல் இருந்ததால் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருந்தது. அவரது வலது கால் மட்டும், இரும்புச் சங்கிலியால், மரத்தில் கட்டப்பட்டிருந்தது. அவர் கட்டப்பட்டிருந்த பகுதியில் தொடர்ந்து பலத்த மழை பெய்ததாலும், சில நாள்களாக அவர் உணவு சாப்பிடாததாலும் அவரால் பேசக்கூட முடியாத நிலையில்தான் மீட்கப்பட்டார். தற்போது அவர் நன்கு உடல்நலம் தேறி வருகிறார்.

தற்போது அவரது உடல்நிலை சீரடைந்து வந்தாலும், அவருக்கு மனரீதியான பிரச்னைகள் இருக்கலாம் என்று அவருக்கு சிகிச்சை அளித்து வரும் மருத்துவர்கள் காவல்துறையிடம் தெரிவித்துள்ளனர். அவரது கைப்பையிலிருந்து சில மருத்துவப் பரிந்துரைகளையும் காவல்துறையினர் கண்டறிந்தனர். அதில், அவர் மனநலப் பிரச்னைகளுக்கு மருந்து சாப்பிட்டு வந்தது உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவரது விசா காலம் முடிவடைந்துவிட்ட நிலையில், கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அவர் இந்தியாவில் வாழ்ந்து வந்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com